மரம் பேசினால்

உனை சுற்றியே இருக்கிறேன்
உனை பேணி பாதுகாக்கவே
உயிர் கொள்கிறேன் என்
உடல் அனைத்தும் உனக்கே
உரித்தாக்குகிறேன் பின் ஏனடா என்
உயிர் பறிக்க துடிக்கிறாய்
பாதக மனிதா ...

அழகாய் இருக்கிறேன் சுற்றுசூழலின்
அரசனாய் உள்ளேன்
அளவிலா உணவளிக்கிறேன்
அன்பாய் உனை அழைத்து
அடி மடியில் அனைத்து கொள்கிறேன்
அன்னையாய் பின் ஏனடா இந்த
அன்னையை அழிக்க அலைகிறாய்
என் அன்பு பிள்ளையே .......

நீ விடும் விஷச காற்றை
நான் உறிஞ்சி என்
உயிர் காற்றை
உன் உயிரில் கலந்து
உனை நொடி நொடி
உயிர்ப்பிக்கிறேன் பின் ஏனடா என்
உயிர் பறிக்க நினைக்கிறாய் மனிதா .......

உனை காக்க எப்பொழுதும்
நின்று கொண்டிருக்கும் எனை சாய்த்து
நிலம் தேடி அலையும் மனிதா
நிலத்துக்குள் புதைந்து போவாய்
நிஜமாகவே நான் இல்லை
என்றால் உணர்வாய் உண்மை இதை
மனிதா நீ ........

உடைந்தாலும் உனக்கு
உதவியாக உடைகிறேன்
விழுந்தாலும் விதையாய்
விழுந்து விருச்சமாய் வளர்ந்து
விடுவேன் உன் நலனுக்காக
நான் மனிதா ........

எனை அழிப்பதாக
எண்ணி உனை நீயே
அழித்துக்கொள்ளாதே அறிவிலியே இந்த
அறிவியல் காலத்திலும் என் அருகே நீ
இருந்தால் தான் உன் அருகில்
நோய் இருக்காது மனிதா ......

மரம் வளர்ப்போம் ! உயிர் காப்போம் !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (19-Aug-16, 8:07 am)
Tanglish : maram pesinal
பார்வை : 3416

மேலே