பெண் அகராதியில் ஆண்
![](https://eluthu.com/images/loading.gif)
நாயகன், நட்சத்திர நாயகன்,
நல்லவன் ,நல்லவனுக்கு நல்லவன்,
வில்லன், வில்லாதி வில்லன்,
மன்னன், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன்.
வல்லவன், வல்லவனுக்கு வல்லவன்,
சகலகலாவல்லவன், மன்மதன்,
தர்மதுரை, தர்மத்தின்தலைவன் ,தங்கமகன்
பட்டிக்காட்டான், இதயத்திருடன் என்கணவர்,
பட்டிக்காட்டு பொன்னையா படிக்காத மேதை .
படிக்காதவன், படிக்காத பண்ணையார்.
சொந்தக்காரன் ,சமையல்காரன் ,காவல்காரன்
வேட்டைக்காரன் முறைமாமன் தர்மராசா,
எங்கள் தங்க ராஜா . உழைப்பாளி
ஊருக்கு உழைப்பவன் ,ஊர்க்காவலன் ,
உழவன் மகன் , உத்தமபுத்திரன். அரிச்சந்திரன்
உத்தமன் , கண்கண்ட தெய்வம் ,தெய்வமகன்,
கல்யாணராமன் , என் பொட்டுக்கு சொந்தக்காரன்,
காவல் தெய்வம், இந்திரன் சந்திரன் ,மாயாவி,
உலகம் சுற்றும் வாலிபன், காதலன், கணவன்,
என் அண்ணன் , அப்பா, முறைமாமன், எங்கமாமா ,
மனிதாபிமானி, அன்பானவன், கருணையுள்ளவன்,
பச்சோந்தி, பிச்சைக்காரன், கொடுமைக்காரன் ,
காமுகன், தடிமாடு, சொரணை கெட்டவன், சோம்பேறி,
உதவாக்கரை, இளிச்சவாயன், குடிகாரன் வீரன்,
நம்பிக்கை நட்சத்திரம், சம்பாதிக்க வக்கில்லாதவன்,
சூதாடி, பொம்பள பொறுக்கி, போக்கிரி ,பொல்லாதவன்,
இம்சைக்காரன், ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன் ,
ரோசக்காரன், உருப்படாதவன் ,ஊர்சுற்றி, சுடுமூஞ்சி....
இப்படி ஏதாவதொரு பெயரை எழுதப் படிக்கத்
தெரியாதவளும் எழுதித்தான் வைக்கிறாள்
தன் இதயத்தின் அகராதியில், அவரவர் கண்ட
அனுபவ தடயத்தின் கல்வெட்டாய்.
*மெய்யன் நடராஜ்