மூர்த்தியும் நானும் டைம்பாஸ் டைம்பாஸ்

மூர்த்தியும் நானும் (டைம்பாஸ் டைம்பாஸ்)
==========================================
அற்பம் வாசிக்கலாமே ம்ம்ம்

பிரஸ் காலனி டூ ரயில் நிலையம் "மேட்டுப்பாளையம் ரோடு " - கோயம்பத்தூர் - 21 பேருந்து தரிப்புகளைக் கடக்கும் இதன் தூரம் 22 கிலோமீட்டர்.

இரண்டரை வருஷம் இந்த சாலையின் போக்குவரத்து மேலும் மக்கள் நெரிசலுக்கு பழக்கப் பட்டவர்கள்
இருவரும் திருச்சி சாலையில் ஒரு மல்டி நேஷனல் நிறுவனத்தில் டிசைன் எஞ்சினியர்ஸ்

என் வீடு திருவள்ளுவர் நகரில் ,, மூர்த்தியின் வீடு வீரபாண்டி பிரிவிலிருந்து ஒரு நூறு மீட்டர் தொலைவில்

திருவள்ளுவர் நகரிலிருந்து பிரஸ் காலனி அடுத்துள்ளதால் அதிகாலை 7:45 மணி ரயில் நிலைய பேருந்து
(32A பிரியமுள்ள பாடல்களை சுமந்துவரும் பிரைவேட் டவுன் பஸ் - பிரஸ் காலனி டூ ரயில் நிலையம்) ,,, காலை திருவள்ளுவர்நகர் கடக்கும் போது முன்னேயே ஏறி இடம் பிடித்துக் கொள்வேன் ,, எல்லோரும் வேலைக்கு போகும் நேரம் என்பதால் சாலையே வாகன நெரிசல் கூடுதலுள்ள நேரம் ,, ஒரு மணித் தியாள பயண சாலை

பிரஸ் காலனி போனாலோ இல்லை பிரஸ் காலனியிலிருந்து கூட்டங்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர்நகர் வந்தாலோ இருக்கைக் கிடைப்பது பெரும்பாடுதான் அலுவலக போக்கு நேரம் என்பதால்

குறிப்பாக ஒரு நாளின் அந்த சம்பவத்தைப்பற்றி இங்கே பகிர்கிறேன்

ப்ரிக்கால் (PRICOL) தொழிலாளிகளின் ஸ்ட்ரைக் டைம் அப்போது

PRICOL Premier Instrumentation and Control Ltd. மேட்டுப்பாளையம் சாலையில் நான்கு கிளைகளைக் கொண்ட
ஸ்பீடோமீட்டர் தயாரிக்கும் அதிநவீன நிறுவனம்

நானும் மூர்த்தியும் எப்போதும் வேலை முடித்துவிட்டு 1C அரசு நகர பேருந்தில் ஏறி மூன்று நிமிடங்களில் டவுன் ஹால் வந்திடுவோம்

அதே 32A பேருந்து ,, டவுன் ஹால் வழி கடந்தே ரயில்வே ஸ்டேஷனில் சென்று ஆட்கூட்டங்களை ஏற்றிவரும்..சிலநேரம் பேருந்து சமயம் வைகினால் அந்த பேருந்து டவுன் ஹாலிலேயே பிரஸ் காலனிக்கு
போக திருப்பக்கூடும் ,, அப்போதும் இருக்கைக்கிடைப்பது ரொம்ப அட்வென்ச்சர் தான்

கைய்யிருப்புகளை சூதானப்படுத்துவதில் தொடங்கி கூட்டங்களோடு மோதி ஏறியாகவேண்டும் ,, இதெல்லாம் ஏன் எதற்காக

வீட்டிற்குச் சென்றால் அற்பம் புறத்தே காலாற குழந்தைகளை கையில் ஏந்தியபடியே நடக்க
எப்போடா சனிக்கிழமை வரும் என்றிருக்கும் ,
வாரம் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்காய்

சரி விஷயத்துக்கு வாறன்

எங்கே விட்டேன் ஆங் PRICOL ஸ்ட்ரைக் டைம் இல் விட்டேன்

அன்றும் அதுபோல டவுன் ஆல் வந்து சேர்ந்தோம்,,, பிரஸ் காலனி வரையான பேருந்து சீட்டுச் செலவு இருவருக்கும் பத்து ரூபாய் தான் ,, மாதக்கடைசி வேறு எங்கள் கையிருப்பு 40 ரூபாயாக இருக்க

டவுன் ஹால் பேருந்து தரிப்பு ஒட்டியுள்ள கடைகளில் ஒன்றில் ,, நன்றாக காளான் வறுவல் எப்போதும்
வயிற்றையும் வாயையும் பிசையும் , மூர்த்தி அற்பம் கட்டுப்பாடு உள்ளவன் நல்ல நண்பன், அழகன் என்னை வழி நடத்துபவன் என்னைவிட வயதில் பெரியவனும் கூட ஒன்றாய் இருந்த காலம் முதல் வாடா போடா என்றே
இருவருக்குள் அழைத்ததுண்டு,,, செல்லப்பெரிட்டு பெள்ளி (BELLI) என்றே அழைப்பேன் அவனும் என்னை போஜூ (BOJU) என்றே அழைப்பான்,,

அன்றுபார்த்து ஏதோ பசி அதிகம் அரட்ட மூர்த்தியிடம் கேட்டேன் டேய் மாப்ள ஏதாவது சாப்பிடலாமா எனத் தொடங்கினேன் அவன் என்னை ஏற இறங்க பார்த்தான் என் மனசிருப்பு புரிந்தவனாகி

வேணாம் மாப்ள இன்னைக்கு வேணாம் நிலவாரம் சரியில்ல இன்னொருநாள் சாப்பள்ளாண்டா என்று எவ்வளவோ கூறினான்,,, கைய்யிருப்புத் தொகையைக் கண்டு அதான் நாப்பர்ரூவா இருக்குல்லடா மாப்ள
பஸ்ஸுக்கு பத்துரூவா தானடா ,, அட வாடா மாப்ள ன்னு சொல்லி அவனுக்கும் ஆசையைக் காட்டி
காளான் வறுவல் பிளேட் ஆர்டர் ,,செய்தொம்,,,, பிளேட் தலா பத்து ரூபாய் என ,, விலை அங்கே நுழையும் முன்னமே கேட்கப்பட்டு உறுதிச் செய்த பின்னரே உள் நுழைந்தோம்,,,

ஆக இருபது ரூபாயே செலவாகும் என்பதால் மூர்த்தியின் முகத்தில் ஒரு அசுவாசம் ஆளுக்கொரு பிளேட் உள்ளிறக்கியதும் ருசி மேலும் அரைபிளேட் வேண்டுமாய் ஆசை வலிப்பூட்டியது,,, மூர்த்தியின் முகம்பார்த்தேன் அவனும் அதே பற்றாக்குறை ஏக்கத்துடனேயே பார்த்து சிரித்தான் ,,

அரைபிளேட் ஐந்து ரூபாய்தான் .. மேலும் ஆர்டர் செய்தொம்,, ஆக கையிருப்பு நாற்பதில் முப்பது ,,,ஏவ்வ்வ்வ்வ்வ் ,,,,,,,,,,,,,, மீதமுள்ளது ரூபாய் பத்து ,, சொல்லியதுபோல பேருந்தும் வந்தது அன்றும் அப்பேருந்து ரயில் நிலையம் செல்லாமல் டவுன் ஹாலிலேயே திரும்பியது ,,, இடிபாடுபட்டு இருவரும் இருக்கைப்பிடித்தாயிற்று,,

பேருந்தில் ஏற நடந்த கலாட்டாவில் என் உடைமையை நன்றாகப் பிடிப்பதாக நினைத்து வேறொரு ஆளின்
பையை பிடுங்கி என் அக்குளில் சொருகிக் கொண்டேன்,,,

பேருந்து ஏறியப்பின்னரே , என் பேக் என் வலது தோளில் இருப்பதைக் கண்டு ,, பின் இது ஏது என்று யோசிக்கையில் ,,,

பின்னாலிருந்து பட்டாப்பட்டியுடன் ஓடிவந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் ,,, யோவ் யோவ் ,, என் வேட்டியைத்தான் அவுத்து ரோட்டுல வீசுன இப்போ என் பையையும் புடுங்கிட்டியே யோவ்வ் குடுயோவ்வ் அடக் குடுயோவ்வ் என்று கூவியதைக் கண்டு மூர்த்தி
விழுந்து விழுந்து சிரித்தான்..

நானும் அற்பம் அசட்டு வாழ்ந்துவிட்டு ,,, தலை சொரிந்தபடியே ஹிஹிஹி இந்தாங்க ணா ன்னு கொடுத்துவிட்டு ... அமைதியானேன் ,,, பேருந்து மெதுவாக அசையத் துவங்கியது ஜன்னல் திறந்ததும்
மாலைக் காற்று வருடல் அப்படியொரு இதம்,, டிக்கட் எடுத்தாயிற்று

இருவரும் ஒருவர் தோள்மீது ஒருவர் விழ குறட்டைவிட்டு அப்படியொரு உறக்கம் உறங்கிக்கொண்டே பயணித்தோம்,, ஒரு நாற்பத்தைந்து நிமிடங்கள் போனதும் ,, காற்றசைவற்ற லேசான சூடு உடலெங்கும் பரவ உறக்கம் விழித்தோம் ,, கேஸ்கம்பெனி பேருந்து தரிப்பில் ,, பஸ் நின்றிருந்தது நிறைய பேர் பேருந்திலிருந்து இறங்கி எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர் ,,,

அட வேறொண்ணும் அம்மானுஸ்யம் இல்லங்க ,,

எல்லா வாகனங்களும் நெரிசலில் நின்றுவிட்டிருந்தன நானும் மூர்த்தியும் இறங்கி,,, அந்த பக்கமா புதர் மறைவில் போயி ஆனந்தமா யூரியன் பாஸ் செய்துவிட்டு ,,, கண்டக்டரிடம் என்னாண்ணா இங்க பிரச்னைன்னு சிரிச்சிகிட்டே கேட்டோம்,,,

கண்டக்டர் ஒரு போடு போட்டாரு பாருங்கே,, PRICOL தொழிலாளிங்க மறியல் ல உக்காந்திருக்காங்க சார் வண்டி இனி நகராது ,, இனி நாங்க வண்டியை திருப்பறோம் ,, இது இப்போ முடியாது போல தெரியுது ன்னு சொல்லிட்டு கேஸ்கம்பெனி வரையான டிக்கட் விலை ருபாய் 4.50 போக மீதி ஐம்பது காசுகளைக் கொடுத்துவிட்டு ,, மலையென நம்பியிருந்த பேருந்தும் பேருந்து நடத்துனர் ஓட்டுனரும் காணாமல் போயினர் ,, "என்னே கொடுமை,,, நட்டாற்றில் சிக்கித் தவித்த கன்றுகளைப்போல முகங்கள் மாறியும்

"கட்" ,,

மூர்த்தி என்னை ஏற இறங்கப் பார்த்தான் ,,, மாமிசத்தைத் தேடும் பசியுள்ள புலிபோல பற்களை நெரித்து அவதாரமெடுத்தவனைக் காணுகையில்,,, எப்படி அட்ஜஸ்ட் செய்ய இந்த சிச்சுவேஷனை ம்ம்ம்,,,, வேறொன்றும் சொல்லவில்லை,,,

முகத்தில் அற்பம் ஃபீலிங்ஸ் வருத்திக் கொண்டு " எல்லாம் சரிடா மாப்ள ,, ஆனா எமோஷன் பத்தலைடா மாப்ள ,,, ஐ வாண்ட் மோர் எமோஷன் என்று எக்காளமாய் மொக்கை போட்டேன்.. அவன் சிரிக்கவே இல்லை,,,

சர்டா மாப்ள வாடா வா,,, நம்ம பாக்காததா,, அன்னைக்கு டாக்டர் என்ன சொன்னாரு ஞாபகமிருக்கா , உனக்கு சுகர் அதிகம் நீ ரெம்ப நேரம் நடக்கோணும்னு சொன்னாரா இல்லையாடா மாப்ள,,, வாடா வாடா என்றவனை வியக்கப் பார்த்தவனை இழுத்து அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம் ,,,

இன்னும் 7 கிலோமீட்டர் ம்ம்ம் என்று வடிவேல் தொனியில் வந்த சப்தத்தை சைலண்டாக்கிக் கொண்டு மறியலில் கோஷமிட்டிருந்த ஆட்கூட்டங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தோம்,,,மூர்த்திக்கு இவ்வளவு கெட்டவார்த்தைகள் தெரியும் என்று சாத்தியமா அன்னைக்குவர எனக்கு தெரியவே தெரியாது ,,அவ்வளவு அர்ச்சனை :/

சென்னைக்கூவத்தையும் ,,கோவை மரக்கடை பாலத்தையும் இவன்கூட நாத்தப்போட்டி வச்சா,, எளுப்புல வின் பண்ணுவான் போலிருக்கு ஹிஹிஹிஹிம்இம்மிம்மிம்மிம் ரேஸ்கேல்ஸ் இம்ம் ,,,

ஸ்ட்ரீட் லைட்டின் வெளிச்சம் போலும் இல்லாது அதோ அந்தகார சாலையில் அழகும் பாங்கும் புத்தியும் நிறைந்த இரு அபலன்களின் பயணம் அங்கு யாருக்கும் பீலிங்க்ஸை குடுத்திருக்காதுதான் ,, "என்ன ஒரு நெனப்பு த்த்வூஊ "

மேட்டுப்பாளையத்திலிருந்து வரவேண்டிய பேருந்துகள் எல்லாம் மேட்டுப்பாளையத்திலேயே முடக்கப்பட்டன அன்று ,,

இயற்கை இப்படியா எங்களுக்கெதிராக சதி செய்வது,,, பசித்த வயிறுகளுடன் இரு வாலிபர்கள்
ஆளிற்கு ஒன்றரைப் பிளேட் காளான் நின்றதுதான் எங்களின் பாவமா,, அதற்குத்தான் இந்த சாபமா,,, "மொக்கையான பீலிங்ஸ் தான் என்ன செய்ய "

கட்

அப்பாடா ஒண்ணரை மணிநேரம் கழிந்து PRICOL நிறுவனம் கடந்துவிட்டோம் வீட்டிற்குப்போக இனியும் ஒரு கிலோமீட்டரே பாக்கி மூர்த்தியின் கெட்டவார்த்தைகளும் வாய்வேர்த்து கோணித்து ஓய்ந்தன கொஞ்சம்,,, அவன் முகத்தைப் பார்த்தவன் லேசாக சிரித்தேன் (கேவலமாத்தா இருந்துச்சு சிரிப்பு)

டேய் வீட்ல என் தம்பி களி உருண்டை உருட்டி அவரைக்கொழம்பு மந்தமா செஞ்சி கட்டித் தயிரோடு காத்திருப்பான் நல்லா சாப்பிட்டு வயிறை தழுவிகிட்டே உறங்க இருந்த என்ன இப்படி வச்சு செஞ்சுட்டியேடா நான் என்னடா உனக்கு பாவம் பண்ணன் என்றான்,,,

சரி வாடா வாடா என்று முதுகை தட்டிக்கொடுத்தபடியே கடக்க முயன்ற போது

மெயின் ரோட்டில் KR ஹாஸ்பிடல் முன்னிலுள்ள சவுண்டு சர்வீஸ் கடையில்,, "ஏண்டா டாய்" என்பதைப்போல ஒரு சிச்சுவேஷன் சாங் ம்ம்,, / வெகு வேகமாக விஜய் பாட்டின் அந்த இடைவரிகள் மாத்திரம் ஒலித்தன

"" இந்த நடப்போதுமா இன்னுங் கொஞ்சோ வேணுமா ஆஹ் இந்த நட போதுமா இன்னுங் கொஞ்சோ வேணுமா ஆஹ் இந்த நட போதுமா இன்னுங் கொஞ்சோ வேணுமா " என இன்சல்ட் செய்த கொடுமையான நேரத்தின்போதே ,,, வாங்கி ஒரு வாரம் கூட ஆகாத மூர்த்தியின் கரும்பழுப்பு நிற பேட்டா செருப்பு அந்த ஸ்பாட்டில் புட்டுக்கொண்டது (என்ன ஒரு கொடுமை சரவணா இது ) :/

மூர்த்தியின் கோபம் மூக்கிற்கேறும் முன்னமே ,,, அந்த சவுண்டு சர்வீஸ் கடைக்காரனைப் பார்த்து யோவ்வ்
அந்த தொலிஞ்ச ரெக்கார்டர கொஞ்சம் நிறுத்துயா என்றேன் ,,,

கோபத்துல மாறின மூர்த்தி மூக்கோட ஷேப்பு ,, மறுநாள் ல இருந்து மாறவே இல்ல ம்ம்

அப்படி இப்படி வீடு போயி சேர்ந்தோம்,,, பசியும் போச்சு ,, ம்ம்,, இதுபோல இன்னும் நிறைய நிகழ்வுகள் சொல்ல இருக்கு ,,ஒவ்வொண்ணா சொல்றேன் நேரம் கிடைக்கையில் ம்ம் :/

இப்போ அவன் US ல இருக்கான் குடும்பத்தோட,, அவனும் இதையெல்லாம் நினைச்சு சிரிப்பானான்னு தெரியலை,,

டாட்டங்க தூக்கம் வருது ம்ம்ம் இன்னத்திய மொக்கை போதும்

"பூக்காரன் கவிதைகள்" - சரவணா

எழுதியவர் : அனுசரன் (20-Aug-16, 2:02 am)
பார்வை : 80

மேலே