சுகம் பழகு

சந்தர்ப்பங்களும் சூழ் நிலைகலும்
உன்னை மட்டும் அல்ல
ஊரையும் மாற்றும்.
மாற்றம் கொள்வதே
மானிட இயல்பு.
இயல்புகளுக்கு இசை.
இசையும் இயக்கமும் தான் திருப்தி.
திருப்திக்கு செய் எல்லாக் காரியங்களையும்
காரியங்கள் காரணங்களைப் பொருத்தே.
பொருத்தமில்லாததை ஏலனப்படுத்து.
ஏலனங்களும் அவமானங்களும் மேம்படுத்தும்
வாழ்கையை.
வாழ்கை உன் கையில்.
கையில் ஏந்தி பிச்சை எடுப்பதற்கு அல்ல .
அல்லாதவைகளை விட்டு விடு.
விட்டு கொடு.
கொடுத்து வாங்கு.
வாங்குவதற்கு முன்
எதைப் பற்றியும் யோசி.
யோசனைகள் இல்லாமல்
எதையும் தொடங்காதே.
தொடக்கமே முயற்சியை
விலைவிக்கும்.
விலைவித்ததை நீ மட்டுமே
வேர் அறுப்பாய்.
இல்லை வேருடன்
அழிந்து போவாய்.

எழுதியவர் : (21-Aug-16, 10:22 pm)
Tanglish : sugam pazhaku
பார்வை : 62

மேலே