உரசல்
அது வசந்த காலத்தின் தொடக்கம்
இரவும் பௌர்ணமியும் ஒத்து இருந்தது
நாங்கள் இருவரும் நடந்து சென்று கொண்டு இருந்தோம்.
சாலை எங்களைக் கடந்து சென்றது.
உரசிகொள்ளாமல் பார்த்துக் கொண்டேன்
அம்மா, அப்பா,
நன்மை , நாகரிகம்,
ஒஷோ , மணிரத்தனம்
என்று சுற்றி வந்தது அவளது பேச்சு.
நான் அவள் பேச்சை
ரசித்துக் கொண்டு இருந்தது மட்டுமே
அவள் அறிவாள்.
ஆனால் பேச்சின் இடையே
அவள் முடியில் ஒன்று
அவள் கன்னத்தினைத் தடவிய பொழுது ,
என் காம இச்சை கிளரப்பட்டது
என்பது தெரிந்திருக்க வாய்ப்பிலை
நானும் சொல்லி கொள்ளவில்லை.