மனைவியின் முத்தம் - குமரி

காட்சி-1::
(கணவனுடன சேர்ந்து நடந்து கொண்டிருக்கும் புதுமனைவி சட்டென திரும்பி பார்க்கிறாள். ஒரு நாய் ஓடி வருகிறது.)
மனைவி::அய்யய்யோ.. வேகமா ஓடிடுவோம். பாருங்க நாய் கடிக்க ஓடி வருதுங்க.!
காட்சி-2::
(உடனே கணவன் நாய் கடித்தால் தன்னை கடிக்கட்டும் என்று தன் இரு கைகளில் மனைவியை தூக்கி கொள்கிறான்)
காட்சி-3::
(ஓடி வரும் நாய் இதை பார்த்ததும் அங்கேயே நின்று பின்வாங்கி சென்று விடுகிறது.)
கணவன்:: (மனைவியிடமிருந்து ஒரு முத்தம் எதிர்பார்த்தவனாக கேட்கிறான்)
எப்படி என் ஐடியா.?
மனைவி:::அய்யோ.. நாயை கண்டால் அதை அடிக்க கல்லைதான் தூக்குவார்கள். தன் மனைவியை தூக்குன ஒரே ஆளு நீங்களாகதான் இருப்பீங்க..!
கணவன்.:::???..!!!