தினம் ஒரு தத்துவ பாட்டு - 34 = 200

“மனுசன மனுசன் ஏய்ச்சுப் பொழைக்கிற உலகமிது…!
மனுசன் நினைச்சுப்பாக்கும் வாழ்க்கையாவும் அமையாது!
சோதனை என்பவன் மனுசனைதான் முய்க்கிறான்
மனுசன் சோர்ந்துப்போன சோனகிரியாய் முழிக்கிறான்”

குடிகளை கொள்ளையடிக்குது ஒரு கூட்டம்
கூடயிருந்தே குழிப்பறிக்குது ஒரு கூட்டம்
பணத்தைக்காட்டி மிரட்டிவருகுது ஒரு கூட்டம்
பணத்துக்காக நேர்மை தவறுது ஒரு கூட்டம்

வீட்டை நோட்டமிடுது கயவர் கூட்டம்
காட்டை வேட்டையாடுது வேடுவர் கூட்டம்
நாட்டை நாசமாக்குது பகைவர் கூட்டம்
பாட்டை மோசமாக்குது புலவர் கூட்டம்

எத்தனை கூட்டம் நாட்டிலிருந்தாலும்
அத்தனை கூட்டமும் சில காலம்தான்..!
பித்தளையும் செம்பும் ஒன்றானாலும்
பொன்னாகாது உருவில் என்றும்தான்..!

புவியில் பிறப்பெல்லாம் பெண்ணாலே – அந்த
பெண்ணுக்கு சிறப்பெல்லாம் பொன்னாலே..!
பிறப்பும் இறப்பும் ஒருமுறைதான் – அதற்குள்
இருக்கும் வரைக்கும் எத்தனை வன்முறைகள்..!

ஆணாதிக்கம் நிறைந்த உலகிலே
பெண்ணாதிக்கம் மீண்டு வருகுதே
கல்வியில் பெண்களின் பங்குகள்
உலகினில் ஆண்களை மிஞ்சுதே

பாவம் செய்பவனுக்கு நரகமாம்
புண்ணியம் செய்பவனுக்கு சொர்கமாம்..!
சொல்பவன் செய்கின்ற பாவங்கள்
சொல்லில் அடங்காத அவலங்கள்..!

ஏற்றத்தாழ்வு மனப்பாண்மை
ஏனோ இன்னும் ஒழியலை….
எத்தனை நாளைக்கு இந்த ஏளனம்?
எல்லோரும் எமன் கையாலதானே சாகணும்!

எழுதியவர் : சாய்மாறன் (22-Aug-16, 6:10 pm)
பார்வை : 112
மேலே