வெள்ளி பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க கவிஞர் இரா இரவி

வெள்ளி பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க !
கவிஞர் இரா .இரவி !
ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெயர்
வெண்கல பதக்கதோடு முடிந்துவிடுமோ ?
எண்ணி இருந்தபோது தங்கம் கிடைக்கவும்
வாய்ப்பு உண்டு என என்ன வைத்தாய் !
தங்கத்திற்காக நீ போராடிய போராட்டம்
தரணியே இமைக்காமல் பார்த்து நெகிழ்ந்தது !
வெள்ளியைப் பெற்று வீரமுடன் வலம் வந்தாய்
வையகத்தின் பாராட்டு மழையில் நனைந்தாய் !
பெண் இனத்துக்கே பெருமை சேர்த்தாய்
பெண்ணின் பெருமையைப் பறை சாற்றினாய் !
பெண் பிறந்தால் பேதலிக்கும் பித்தர்களுக்கு
புத்திப் புகட்டி வெள்ளி பதக்கம் வென்றாய் !
ஆணிற்குப் பெண் சமம் என்றனர் இல்லை
ஆணை விட பெண்ணே உயர்வு நிருபித்தாய் !
பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் யாவரும்
பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் மகிழ்ந்தனர் !
ஹைதராபாத்தில் பிறந்த சிந்து பற்றி
கவிஞர்கள் அனைவரும் பாடுகின்றனர் சிந்து !
வஞ்சியர் உன்னை கொண்டாடி மகிழ்கின்றனர்
வரலாற்றில் உன் பெயர் பதித்தாய் சிந்து !
உந்தன் பெற்றோர்கள் மட்டும் மகிழவில்லை
உலகில் பெண் பெற்ற பெற்றோர்கள் அனைவரும் மகிழ்ந்தனர் !
விளையாட்டை விளையாட்டாய் எண்ணாமல் போராடி
வெள்ளி பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க !.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Aug-16, 9:37 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 53

மேலே