சோலைக்குப் பிறந்தநாள் -- வெண்பா
சோலைக்குப் பிறந்தநாள் -- வெண்பா
பிறந்தநாள் கொண்டாடும் பீடுநடை தன்னில்
மறவாமல் சோலை மகத்துவம் பேச
இறவாத வாழ்வு இறைமை யருளச்
சிறப்புடை நாளிதுவாம் சீர் .
கற்றநம் சோலை கருத்தோங்கி நின்றிடவும்
பெற்றநம் பைந்தமிழ்ப் பேசிடவும் காசினியில்
முன்னின்று மெய்ப்பித்த முத்தமிழின் பாவலரே
நின்புகழ் வாழ்கவே நீடு .
அன்புடை நெஞ்சமே அற்புதம் ; பாரினில்
நன்னெறி சொல்லியே நல்லதைச் செய்திடும்
உன்னதச் சீலரே உன்றனைப் போற்றுவேன் .
நின்புகழ் வாழுமே நீடு .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
