சாக்சி மாலிக்
பெண்ணாய் பிறந்து வாழ்வில்
பெரும் பாடுபட்டு
பேர் ஆடவரும் செய்யாத செயலை
உடல் வலிமையாலும்
உள்ளத்தின் வலிமையாலும்
உலகறிய செய்தாய்
உன் பாரத நாட்டின் பெருமையை
இன்று பெண்ணே !
மங்கை இவள் இவளுக்கு ஏன்
மல்லியுத்தம் என கூறியும்
தலையீடும் உன் எதிர் கால பயணம்
தவறென மற்றவர் கூறியும்
தன் நாட்டிற்கு
தன்னை அர்ப்பணித்து பெரும்
பங்காற்றினாய் விளையாட்டில் அன்று !
நீ வாங்கிய ஒவ்வொரு
அடியும் உன்நாட்டின் வெற்றி படிகளாக மாற்றி
அமைத்து
உன்னையும் உன்நாட்டின் பெருமையையும்
உலகறிய செய்தாய்
உதயசகீ நீ
உனை தூற்றிய
உண்மை அறியாத நாவுகள் அனைத்தும்
உனை வாழ்த்தி வாயசைந்து
போனது இன்று !
மன வேதணையும் உடல் வலியையும்
மறந்து நாட்டின் விளையாட்டின்
மானத்தை காக்கவும்
மக்களின் விளையாட்டு மன வலியை போக்கவும்
மருந்தொன்று நல்கினாய்
மங்கையே நீ வெண்கல வடிவில் !

