உண்மையில் சுதந்திரம் பெற்றோமா

செவிகளில் என் குரல் விழுந்ததோ -
செயல் இழந்து வீழ்ந்ததோ
என்னைப்போல்!
என்னை சுற்றி எங்கும் சுதந்திரமோ-
சுதந்திரம் சுவாசம் இழந்ததோ
என்னைப்போல்!

மூச்சு முட்டி நிற்கிறேன்
பேசும் உரிமை இழந்து ,
தவறு இன்றியும் மௌனிக்கிறேன்
விளக்கும் உரிமை இழந்து!
அடங்கி அடக்கி போகிறேன்
முடக்கப்பட்டு முடிவின்றி போகிறேன்
முன்னாள் பிறந்தவன் ஆண் என்பதால்
என் பிறப்புரிமை மறந்து!

திறமைகள் இருந்தும் மறைக்கிறேன்
வாய்ப்புகள் மறுக்கப்படும் என தெரிந்து
உணர்த்தும் உரிமை இழந்து!

இன்னும் இப்படித்தான்
இனியும் இப்படித்தான்
எங்கே சுதந்திரம்!!!

எழுதியவர் : nila (24-Aug-16, 1:51 pm)
பார்வை : 130

மேலே