என் அம்மா
அவள் கருவறையில் புகுந்திட மூன்று வருடங்கள் தாமதபடுத்தி விட்டேனாம்.
என்னை சுமக்கும் முன் அவள் மேல் சுமத்தப்பட்ட பட்டத்தை நான் அறிந்தேன்.
நான் பிறந்த பொழுது தந்த வலியைவிட அதிகமாக வலித்திருக்க கூடும் என்றுணர்ந்தேன்.
மெய் வருத்தி உயிர் தந்துவிட்டு
அவள் உயிர் போக கிடந்தாளாம்.
உயிர் சுமந்து உடல் தந்தவளே!
இத்தனை கஷ்டங்கலையா கொடுத்துவிட்டேன் .
பாவியல்லவா நான்!
குரல் நடுங்க.. கண்ணீர் தெறிக்க..
அழுகை வெடிக்கையில் அம்மா என்றழைத்தேன்.
என் செல்வமே என்று அள்ளி அணைத்துக் கொண்டாள்.
அவள் அல்லவா என் செல்வம்!!