சுதந்திர தினம்

அ்மைதியைத் தேடும் காஷ்மீர்
தண்ணீர் தேடும் தமிழகம்
வறண்டு கிடக்கும் மகாராஷ்டிரா
காவிரியை சிறைபிடித்த கர்நாடகா
இலவசக் கறை படிந்த வாக்கு
கடல் கடந்த குற்றாலீசுவரன்
நீதி கேட்கும் சாந்தி
சுவிஸ்க்குள் சுருண்டு கிடக்கும் வளமை - இங்கு
மட்டைக்கு மட்டுமே மைதானமானதால்
முறிந்து போனது
ஹாக்கி ஸ்டிக் மட்டுமல்ல
தங்கக் கனவும்தான்
முகம் தெரியாத அபினவ் பிந்த்ராக்கள்
எங்கள் குருவிக்கார குழந்தைகளில்!
சாலையோரக் குளிர்சாதனப்பெட்டி
இன்னும் நிறையாத வயிறுகளுக்காக!
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் பாடுகிறான் பாரதி
70-வது சுதந்திர தினத்திலும்!!

எழுதியவர் : (24-Aug-16, 11:59 am)
Tanglish : suthanthira thinam
பார்வை : 156

மேலே