70 ஆண்டு அடிமைகள்
70 ஆண்டிற்கு முன் அடிமை அந்நியர்களிடம் அதற்கு பின்
மதங்களால் , ஜாதிகளால், மொழிகளால், இலவசங்களால், ஊழல் உள்ள அதிகாரிகளால் இவை அனைத்தும் நாற்காலியாய் போட்டு அமர்ந்து ஆட்சி செய்யும் அரசியல் தலவலிகளால் அவர்களை நிற்னை செய்யு வியாபரிகளிடம், அவர்களை ஊக்குவிக்கும் உலக வர்த்தகத்தால்
அடிமைகளாய் தான் இறக்கும் வரை இறந்த பின் நமது ஊனும் நான்கு பேரை நம்பி தான்.
விவசாயிகளின் துயறத்திலும்
வன்முறைகளின் எழுச்சியிலும்
சமூக ஊடங்களால் ஏற்படும் அவலங்களும் அதற்கு பட்டாப்போட்டது போல் நாம் அதை கட்டி அழுவதும்
காதல் என்ற பெயரில் காவு வாங்கும் காம கொடுரங்களும்
இயற்கை அழித்து செயற்கை வளர்பதிலும்
இடை தரகர்களின் எண்ணிக்கையிலும்
நோயின் வளர்ச்சியும் தான் அடைந்த 70 ஆண்டு கால வளர்ச்சிகள்
தனிமனித சுதந்திரம் என்று போனதோ அன்றே மறந்து போனோம்
காந்தியும் காமராஜரூம் அம்பேத்கரும் போராடியது இதற்கு தான் என்றால் கொண்டாடுவோம் சுதந்திரத்தினமாக
மீண்டும் புத்தர்,இயேசு, நபிகள் தோன்றினாலும் தீரா துயரத்தில் மீளா உலகத்தினர்களில் ஒருவராகிவிடுவர்
இறுதியாக:
அன்று சுதந்திரமில்லா அடிமைகள்
இன்று சுதந்திரமுள்ள அடிமைகள்
ஆகமொத்தம் அடிமைகள் தான்