ஆனாலும் பெண்ணே
பெண்ணினமே
நீ
நிமிர்ந்து நடக்கும்வானவில்
திமிர்ந்து எழுந்த முழுநிலவு.
நீ
முன்வைக்கும் பாதத்தடங்கள்
அழியா மை பூசியே
பூமியில் அரசோச்சுகிறது.
வான்மொய்கும் விண்மீன் வண்டுகளாய் நீ
அகிலமெங்கும் அரசோச்சுகிறாய்.
இனி இவ்வுலகத்தை
ஓரடியாவது வளர்க்க உன்னாலே முடியும்.
ஆனாலும் பெண்ணே......!!!!
சன்னல்கள் நுழையும்
மென்காற்று மட்டுமல்ல ..
சுழன்று அடிக்கும்
சூறாவளிகூட - உன்
வேகம் தொடமுடியாது.
ஆனாலும் பெண்ணே......!???
மூன்றடியில் உலகளந்தவன்கூட
உன்
ஆற்றல் கண்டு அஞ்சுவான்.
உன் கொத்துருண்டைக்கூந்தலுக்குள்
பூலோகம் சுருண்டு படுக்கும்,
ஆனாலும் பெண்ணே...?,?,?
உன் விழி கீறும் கோடு
அண்டம் கடக்கும் பாதை
கண்ணீர் புரண்ட விழிகள்- இனி
அனல் வீசும் காற்று
இதழ் உதிர்க்கும் மொழிகள் -தமிழ்கூறும்
ஆறாம் இலக்கணம் .
ஆனாலும் பெண்ணே....???,
நீ
ஆற்றலின் அமுதசுரபி
போற்றலின் புண்ணியநதி
தூற்றலை அறுக்கும் வைரக்கல்,
நீ
உலகக்கண்ணாடி
உன்னாலே எவ்வுயிரும்
தன்முகம் பார்க்கும் .
ஆனாலும் பெண்ணே,....????
உன்
வியர்வை துளிநீராலே,.
இல்லறச்சோலை பூ பூக்கும்
நீ
அயர்வு தொலைத்ததாலே
துயர்வின் தூசு தட்டினாய்..
ஆனாலும் பெண்ணே,.
பெண் போற்றும் இவ்வுலகம்
பெண்ணை
புழுதிவாரி தூற்றலாமோ
பண்பாடு
புண்பட்டே வருகுதம்மா...
மண் மாண்பு மாண்டுபோனால்
பெண் பாடு வீணேயம்மா
பொறுமை இழக்காதே- பெண்ணே
பெருமை இழக்காதே
கட்டுப்பாட்டு பெண்ணுக்கு
கண்ணேயம்மா.
தட்டுப்பாடு எதிலும் வேணாமம்மா
விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை தானே
முட்டுக்கொடுக்கும் குடும்பத்தூணே
நெறிபிறழா வாழ்வே நீதி
நீதிமன்றத்தில்
பாதி வாழ்வு போனபின்னே
வேறென்ன மீதி..

