தோழி

தோழி...
(தனிமையில் மரத்தடி நிழலில் தோழியின் நினைவுகளோடு கலங்கிய கண்களுடன் நான்... )
தோழியுடன் பழகிய இனிமையான காலங்களை நினைத்தாலே கண்கள் ஈரமாகுதே...
இன்று முடிந்துபோன அந்த தருணங்களை நினைத்து நினைத்து நெஞ்சமும் வலிக்கின்றது...
தோழியுடன் சண்டையிட்டு சிலமணிநேரம் கூட பேசாமல் இருந்ததில்லையே...
இன்று சுயநலம் கொண்ட சதிகாரர்களோடு சிலநொடிகள் கூட பேச விருப்பமில்லை...
தோழியோடு இருந்த நாட்களில் ஒரு நிமிடம் கூட தனிமை என்னை நெருங்கியதில்லையே.
இன்று தனிமை மட்டுமே என்னை ஆளும் நிலமையும் வந்து சேர்ந்தது...
தோழியின் முகம் காண துடித்த நாட்களும் தொலைந்து போனதே...
இன்று போலி முகமூடி அணிந்த வெற்று முகங்களை காணவும் கண்கள் மறுக்கின்றது..
அன்பு, மகிழ்ச்சி, உறவுகள் அனைத்தும் நம் நட்புக்கு அடிமையானதே...
இன்று சோகம் தனிமை வெறுப்பு இவையனைத்தும் சேர்ந்தென்னை வாட்டுகிறது...