எழுத்தாளன்
வெடி வைத்து தகர்க்க மலைப்பாறையல்ல - ஆயிரம்
வெடிகுண்டு வேட்டுக்கள் எழுத்தாலே செய்பவன்!
தண்ணீர் ஊற்றி அழிக்க தரைக்கோலமல்ல - ஆயிரம்
தத்துவங்கள் தந்திடுவான் தமிழ் பாலமூடே!
தென்றலோடு விளையாடும் மரக்கிளைகள் போலே
செந்தமிழோடு விளையாடும் இவன் கனவுகள்!
காட்சிப்பிழைகள்.....
இவன் கற்பனைச்சேலையின் நூலிழைகள்......