ரானா சிங் M - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரானா சிங் M |
இடம் | : Nagecoil |
பிறந்த தேதி | : 25-Nov-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 19 |
கவிதை எழுத தெரியாது ஆனால் எழுத புடிக்கும்..
ஓட்டுவீடு என்றாலும் என் நினைவுகளை தாங்கி நிற்கும் மாளிகை அது...
உறவு என்ற பெயரில் வாழும் வஞ்சகர்களின் சதியால் பல முறை அதன் கூரை உடைந்த நிகழ்வுகள...
உடைந்த உடனே பழுதுபார்க்க பணமில்லாமல், இப்போ வெயில் காலம்தானே மழை தொடங்கும் முன் செஞ்சுரலாம் என சமாளிக்கும் அம்மாவின் யதார்த்தம்...
வீட்டை சரிசெய்ய கடன் வாங்கிய காசில் மகளுடைய உயர்கல்வியின் தொடக்கம்...
மழை காலமும் வந்தாச்சு மழைநீர் முழுக்க என் வீட்டினுள் ஒழுகிகொண்டிருக்க மிஞ்சியது என் ஆட்டுகுட்டி படுக்கும் இடம் மட்டுமே...
உறவுக்கார கயவர்கள் கோழிக்கறி மாட்டுக்கறி என விதவிதமாக ருசி பார்த்து கொண்டிருக்கும் நேரம் ஆட்டுக்குட்டிதான் அடைக்கலம் தந்தத
அந்த அழகிய பூஞ்சோலையின் அருகில் என் குடிசை ...
பலவகையான பூக்களை கொண்ட பூஞ்சோலை அது...
பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி உண்டு அந்த மலர்கள் ஒவ்வொன்றின்கும்...
தினமும் பூஞ்சோலையை பார்க்கும் எனக்கோ ரசனை இல்லை...
ஒருநாள் ஒரு நீல நிற மலர் என்னை நோக்கி சிரித்தது...
அதன் அழகில் நானும் வீழ்ந்து விட்டேன்...
வீழ்ந்த என்னிடமிருந்து இரு கண்களையும் பறித்து கொண்டது நீல மலர்...
நீல மலரை காண தினமும் செல்கிறேன் எனக்கே தெரியாமல்...
மலரை பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி சொல்லதெரியாத உணர்வு...
நீலமலருக்கும் என்மீது காதல், என்னை காண தினமும் ஏங்கி நிற்கும்...
வேறு மலர்களை என் கண்கள் ஏறெடுத்தால் நீ
தவிப்பு ...
நான் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் என்னை திருமணம் என்ற பந்தத்தில் சேர்த்தாயே அம்மா...
இப்போது நான் படும் வேதனை உனக்கு தெரிகிறதா...
அவர்கள் சொன்ன ஆயிரத்தில் ஒன்றுகூட உண்மை இல்லை தாயே...
போதை பழக்கத்தில் புரண்டவனை என் தலையில் கட்டி வைத்தார்களே...
எழுத படிக்க தெரியாதவனை டிப்ளமோ என்றார்கள் அம்மா...
அவனிடம் சிறிதேனும் கருணை இல்லை முழுக்க காமம் மட்டுமே...
நான் சம்பாதித்து அவனை வாழ வைக்க எனக்கு தலைவிதியோ..
மிருகம் என்று கூட அவனை சொல்ல மாட்டேன் மிருகங்கள் கூட நன்றி உள்ளவை..
இரு ஆண்டுகளில் ஒருமுறை கூட அவன் முகத்தை நான் ஏறிட்டு பார்த்ததில்லை ...
அப்பா இல்லை என்ற குறை தெரியாம
என் கனவில் ஒரு அரசியல்...
சாதி மதம் பார்க்காத அரசியல்...
ஏழையின் வயிற்றில் அடிக்காத அரசியல்...
விவசாயியை தூக்கில் ஏற்றாத அரசியல்...
இயற்கை வளங்களை பாதுகாக்கும் அரசியல்...
முறைகேடாக சம்பாதித்த பணத்தை பிடுங்கி இயலாதவனுக்கு கொடுக்கும் அரசியல்...
ஊழல் என்ற சொல்லை உருக்குலைய வைக்கும் அரசியல்...
லஞ்சம் வாங்கிய கையில் விலங்கு மாட்டும் அரசியல்...
மக்களின் எண்ணங்களை மதிக்கும் உயர்வான அரசியல்...
காவலர்கள் மக்களை காவு வாங்காமல் காவல்காக்க வைக்கும் அரசியல்...
போலி சாமிகள் மந்திர மாயங்களை அடக்கி ஒடுக்கும் அரசியல்...
போலி இறக்குமதியை தவிர்த்து விவசாயியை பாதுகாக்க இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும்
நீயும் அடிக்கடி வண்ணம் மாற்றுகிறாயே ...
சில அரசியல்வாதிகளின் கரைவேட்டியைப் போல!!
என் கனவில் ஒரு அரசியல்...
சாதி மதம் பார்க்காத அரசியல்...
ஏழையின் வயிற்றில் அடிக்காத அரசியல்...
விவசாயியை தூக்கில் ஏற்றாத அரசியல்...
இயற்கை வளங்களை பாதுகாக்கும் அரசியல்...
முறைகேடாக சம்பாதித்த பணத்தை பிடுங்கி இயலாதவனுக்கு கொடுக்கும் அரசியல்...
ஊழல் என்ற சொல்லை உருக்குலைய வைக்கும் அரசியல்...
லஞ்சம் வாங்கிய கையில் விலங்கு மாட்டும் அரசியல்...
மக்களின் எண்ணங்களை மதிக்கும் உயர்வான அரசியல்...
காவலர்கள் மக்களை காவு வாங்காமல் காவல்காக்க வைக்கும் அரசியல்...
போலி சாமிகள் மந்திர மாயங்களை அடக்கி ஒடுக்கும் அரசியல்...
போலி இறக்குமதியை தவிர்த்து விவசாயியை பாதுகாக்க இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும்
சொந்தபந்தங்களை வெறுத்து, அயல்நாட்டில் துரிதமாய் நடக்கும் கட்டிடப் பணியில்,
சுட்டெரிக்கும் சூரியனின் கோவக்கனலில் சிக்கி,
உடலின் நீர்ச்சத்து குறைந்து,
தடுமாறி விழுந்தேன் இரண்டாம் மாடியிலிருந்து,
ஐயோ!!!.. என் கால்களுக்கு என்ன ஆனதோ...
சுற்றும் முற்றும் பார்த்தேன்... ஒருவர் கூட இல்லை எனக்கு உதவ...கதறினேன் கலங்கினேன் சொந்தபந்தங்களின் அருமையை உணர்ந்தவனாய்...
ஆசையோடு பட்டாம்பூச்சியை பிடித்தேன் ஒடிந்து போனது அதன் அழகிய இறகுகள்... கோபித்துக் கொண்டேன் இறைவனிடம் , ஏன் இவ்வளவு மென்மையான இறகுகளை அதற்கு கொடுத்தாய் என்று,
இறைவனிடம் பதில் இல்லை...
காலங்கள் சென்றன..,
ஒரு நாள் என் இதயம் நொறுங்கி போனது ஒரே ஒரு சொல்லால்.,
இப்போது இறைவன் சொன்னார்., உன் இதயத்தை விட வலிமையாக பட்டாம்பூச்சியின் இறகை படைத்திருக்கிறேன் என்று...
ஆசையோடு பட்டாம்பூச்சியை பிடித்தேன் ஒடிந்து போனது அதன் அழகிய இறகுகள்... கோபித்துக் கொண்டேன் இறைவனிடம் , ஏன் இவ்வளவு மென்மையான இறகுகளை அதற்கு கொடுத்தாய் என்று,
இறைவனிடம் பதில் இல்லை...
காலங்கள் சென்றன..,
ஒரு நாள் என் இதயம் நொறுங்கி போனது ஒரே ஒரு சொல்லால்.,
இப்போது இறைவன் சொன்னார்., உன் இதயத்தை விட வலிமையாக பட்டாம்பூச்சியின் இறகை படைத்திருக்கிறேன் என்று...
நினைத்தாலே கண்ணீர் வர வைக்கும் உன் நினைவுகள்...
உன் நட்பை பெறுவதற்கு முயற்சி செய்த நாட்கள் வேடிக்கையடி ... உன் பார்வை என்மீது படுவதற்காக நான் செய்த பலவும் அறிவாயோ தோழி ...
உன்னுடைய நட்பை பெற்ற நாட்கள் ஆனந்தமடி ... நட்பு உலகில் இரவு பகல் தெரியாமல் பேசினோமே தோழி...
உன் தன்னலம் இல்லாத அன்பு என்னை கவர்ந்ததடி... என்னிடம் நீ எதை விரும்பினாயோ இன்றுவரை அறியேனே தோழி ...
நான் தேர்வில் வெற்றி பெற என்னை விட முயன்றவள் நீதானடி... எனது வெற்றிகளை முதன்முதலில் சொல்ல துடிப்பதும் உன்னிடமே தோழி ...
உன் தூய்மையான பாசத்திற்கு முன் நான் என்றுமே அடிமையடி... நட்பு என்ற வார்த்தைக்கு விளக்கம் நீ மட்டுமே த