நீல மலர்

அந்த அழகிய பூஞ்சோலையின் அருகில் என் குடிசை ...
பலவகையான பூக்களை கொண்ட பூஞ்சோலை அது...
பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி உண்டு அந்த மலர்கள் ஒவ்வொன்றின்கும்...
தினமும் பூஞ்சோலையை பார்க்கும் எனக்கோ ரசனை இல்லை...
ஒருநாள் ஒரு நீல நிற மலர் என்னை நோக்கி சிரித்தது...
அதன் அழகில் நானும் வீழ்ந்து விட்டேன்...
வீழ்ந்த என்னிடமிருந்து இரு கண்களையும் பறித்து கொண்டது நீல மலர்...
நீல மலரை காண தினமும் செல்கிறேன் எனக்கே தெரியாமல்...
மலரை பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி சொல்லதெரியாத உணர்வு...
நீலமலருக்கும் என்மீது காதல், என்னை காண தினமும் ஏங்கி நிற்கும்...
வேறு மலர்களை என் கண்கள் ஏறெடுத்தால் நீல மலரின் முகம் வாடும்...
நீல மலரை தவிர வேறு மலரை நான் ரசித்தது இல்லை இன்றளவும்...
நீலமலருக்கோ சந்தேகம் நான் பூஞ்சோலையை ரசிக்க வருகிறேன் என்று...
நான் வருவதை பார்த்ததும் தன் இதழ்களை மூடிக்கொள்ளும் அவசரமாக...
நானும் விளையாட்டாக "நான் ஊதா பூவைதான் காணவந்தேன்" என கூறிவிட்டு திரும்புவேன்...
நீல மலரின் சந்தேகம் பெரிதாகி என்னை முழுமையாக வெறுத்துவிட்டு வேறு பூஞ்சோலைக்கு சென்றுவிட்டது...
ஆயிரம் மலர்கள் பூஞ்சோலையில் இருந்தும் நீல மலருக்காக என் மனம் ஏங்கி தவிக்கின்றது...
நீலமலர் பூத்த தடத்தில் நான் உறைந்து கிடக்கிறேன் ஒரு கற்சிலையாக...

எழுதியவர் : ரானா சிங் M (2-Nov-16, 4:27 am)
Tanglish : neela malar
பார்வை : 78

மேலே