ஓட்டுவீடு

ஓட்டுவீடு என்றாலும் என் நினைவுகளை தாங்கி நிற்கும் மாளிகை அது...
உறவு என்ற பெயரில் வாழும் வஞ்சகர்களின் சதியால் பல முறை அதன் கூரை உடைந்த நிகழ்வுகள...
உடைந்த உடனே பழுதுபார்க்க பணமில்லாமல், இப்போ வெயில் காலம்தானே மழை தொடங்கும் முன் செஞ்சுரலாம் என சமாளிக்கும் அம்மாவின் யதார்த்தம்...
வீட்டை சரிசெய்ய கடன் வாங்கிய காசில் மகளுடைய உயர்கல்வியின் தொடக்கம்...
மழை காலமும் வந்தாச்சு மழைநீர் முழுக்க என் வீட்டினுள் ஒழுகிகொண்டிருக்க மிஞ்சியது என் ஆட்டுகுட்டி படுக்கும் இடம் மட்டுமே...
உறவுக்கார கயவர்கள் கோழிக்கறி மாட்டுக்கறி என விதவிதமாக ருசி பார்த்து கொண்டிருக்கும் நேரம் ஆட்டுக்குட்டிதான் அடைக்கலம் தந்தது அம்மாவுக்கு...
பசித்த வயிறை இறுகப் பிடித்துக்கொண்டு ஆட்டுகுட்டியின் அரவணைப்பில் தூங்கிய தினங்கள்...
என்னோட கல்லூரி தோழிக்கு சாப்பிட வீட்டினுள் குடை பிடித்து சமையல் செய்த அக்காவின் பாசம்...
எங்கள் திருமண நாட்களில் வண்ண சாயங்கள் பூசி அழகாக காட்சி தந்தாலும் கூட அதை ரசித்தது இல்லை...
இப்போது மனம் ஏங்குகிறது பழைய நினைவுகளோடு ஒருமுறை என் வீட்டில் படுத்துறங்க...