கனவே கனவாக

என் கனவில் ஒரு அரசியல்...
சாதி மதம் பார்க்காத அரசியல்...
ஏழையின் வயிற்றில் அடிக்காத அரசியல்...
விவசாயியை தூக்கில் ஏற்றாத அரசியல்...
இயற்கை வளங்களை பாதுகாக்கும் அரசியல்...
முறைகேடாக சம்பாதித்த பணத்தை பிடுங்கி இயலாதவனுக்கு கொடுக்கும் அரசியல்...
ஊழல் என்ற சொல்லை உருக்குலைய வைக்கும் அரசியல்...
லஞ்சம் வாங்கிய கையில் விலங்கு மாட்டும் அரசியல்...
மக்களின் எண்ணங்களை மதிக்கும் உயர்வான அரசியல்...
காவலர்கள் மக்களை காவு வாங்காமல் காவல்காக்க வைக்கும் அரசியல்...
போலி சாமிகள் மந்திர மாயங்களை அடக்கி ஒடுக்கும் அரசியல்...
போலி இறக்குமதியை தவிர்த்து விவசாயியை பாதுகாக்க இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் அரசியல்...
தன் மக்களை அயல்நாட்டில் கையேந்தாமல் பாதுகாக்கும் அரசியல்...
மக்களை மக்களாக மதிக்கும் அரசியல்...

எழுதியவர் : ரானா சிங் M (30-Sep-16, 3:34 pm)
Tanglish : kanave kanavaga
பார்வை : 182

மேலே