மூஞ்சுரு விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பக்தியுடன் மூஞ்சுரு நல்விநாய கன்தாளை
முக்காலும் நாம்போற்ற ஈடற்ற - சக்தியவன்
நல்லன வெல்லாமே நல்குவான்; வல்லபனை
எல்லையின்றிப் போற்று மகிழ்ந்து! 1

முக்காலும் மூஞ்சுரு நல்விநாய கன்தாளை
எக்கணமும் நாம்போற்ற தெய்வமவன் - இக்கணமே
நல்லன வெல்லாமே நல்குவான்; வேண்டினோர்க்(கு)
ஒல்லையில் தீருந் துயர்! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-16, 2:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே