மும்முக விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

மும்முக நல்விநாய கன்தாளை முக்காலம்
நம்பிக்கை யாய்த்தொழ நாதனாம் - தும்பிக்கை
நாயகன் என்றும் நலமருள்வான் நாமவனை
தாயெனப் போற்றுவோம் நன்று! 1

நம்பிக்கை யாய்த்தொழ நாதனாம் நாம்காணும்
மும்முக நல்விநாய கன்தானே - உம்மென்னும்
முன்னாலே அன்றாடம் முந்திவந்(து) ஆதரிப்பான்
அன்னவனை என்றும் தொழு! 2

முந்தியே வந்தருள் நல்கிடும் மும்முக
தொந்தி விநாயகனை தூய்மையாய் - வந்து
வணங்குவோர்க்கு வேண்டிய தெல்லாம் தருவான்;
இணக்கமுடன் என்றும் இரு! 3 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-16, 2:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே