தோழி என்ற உறவு
நினைத்தாலே கண்ணீர் வர வைக்கும் உன் நினைவுகள்...
உன் நட்பை பெறுவதற்கு முயற்சி செய்த நாட்கள் வேடிக்கையடி ... உன் பார்வை என்மீது படுவதற்காக நான் செய்த பலவும் அறிவாயோ தோழி ...
உன்னுடைய நட்பை பெற்ற நாட்கள் ஆனந்தமடி ... நட்பு உலகில் இரவு பகல் தெரியாமல் பேசினோமே தோழி...
உன் தன்னலம் இல்லாத அன்பு என்னை கவர்ந்ததடி... என்னிடம் நீ எதை விரும்பினாயோ இன்றுவரை அறியேனே தோழி ...
நான் தேர்வில் வெற்றி பெற என்னை விட முயன்றவள் நீதானடி... எனது வெற்றிகளை முதன்முதலில் சொல்ல துடிப்பதும் உன்னிடமே தோழி ...
உன் தூய்மையான பாசத்திற்கு முன் நான் என்றுமே அடிமையடி... நட்பு என்ற வார்த்தைக்கு விளக்கம் நீ மட்டுமே தோழி ...
நான் பாசம் என்னும் வார்த்தையின் பொருளுணர்ந்தேன் உன்னாலடி... எத்தனை பிறவி எடுத்தாலும் நட்பு என்னும் உறவு நீயே தோழி ...