என்ன ஒரு பொறாமை இந்த மனதிற்கு

உன் இதழ் உதிர்க்கும் வார்த்தைகள்
என் செவிகளுக்காக மட்டுமே...!
உன் வார்த்தைகளை கூட
மற்றவர் செவிகளுக்கு
விட்டு கொடுக்க மனமில்லை...!
இவை எல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று
எங்கோ ஒரு மூலையில்
ஓசை கேட்கின்றது...!
எனினும் அந்த ரீங்காரத்திலே
மனம் லயித்து விடுகின்றது....!