தவிப்பு
தவிப்பு ...
நான் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் என்னை திருமணம் என்ற பந்தத்தில் சேர்த்தாயே அம்மா...
இப்போது நான் படும் வேதனை உனக்கு தெரிகிறதா...
அவர்கள் சொன்ன ஆயிரத்தில் ஒன்றுகூட உண்மை இல்லை தாயே...
போதை பழக்கத்தில் புரண்டவனை என் தலையில் கட்டி வைத்தார்களே...
எழுத படிக்க தெரியாதவனை டிப்ளமோ என்றார்கள் அம்மா...
அவனிடம் சிறிதேனும் கருணை இல்லை முழுக்க காமம் மட்டுமே...
நான் சம்பாதித்து அவனை வாழ வைக்க எனக்கு தலைவிதியோ..
மிருகம் என்று கூட அவனை சொல்ல மாட்டேன் மிருகங்கள் கூட நன்றி உள்ளவை..
இரு ஆண்டுகளில் ஒருமுறை கூட அவன் முகத்தை நான் ஏறிட்டு பார்த்ததில்லை ...
அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் வளர்ந்த நான் இப்போது ஏங்குகிறேன் அப்பாவை நினைத்து...
என் தலையணைக்கு எப்போதுமே மழைக்காலம் தலையணை கூட கேட்கிறது எங்கே வசந்தம் என்று ...
என்னை வந்து அழைத்து போங்கள் அம்மா,என் உயிர் மட்டுமே இப்போது மிச்சம்...