படமும் கவியும்
படமும் கவியும்
******************
என்னை சாகடித்தாலும்
உன்னை வாழ வைப்பேன் நான்......
என் குரல் வளை நெரிக்கப்படுகிறது
நீ சுகமாக சுவாசிக்க
விரும்பியே கழுத்தை நீட்டுவேன் நான்....
நீ வேறு
நான் வேறு இல்லை
நீ தான் நான்....
நீ நன்றாக வாழ வேண்டும்
நான் அதை பார்த்து கொண்டே
கண் மூட வேண்டும்.....
ஆகா
என்ன தவம் நான் செய்தேன்
உன்னை பார்த்துக் கொண்டே
உன்னாலே என் உயிர் போக போகிறதே.....
நீயல்லவா என் உயிர்த் தோழன்
இந்த பாவப்பட்ட பூமியில்
இந்த பாவி நான் இருக்கக் கூடாது
என்றே விடுதலை தருகிறாயே....
எட்டி உதைக்கும்
உன் பாதத்திற்கு
கோடி கோடி முத்தங்கள் நண்பா.....
சுதந்திர வானில் பறக்கிறேன்
உன் விழியை விட்டு
என் விழி விலகவில்லை...
இன்று ஏனோ வலி இன்பமாகவே வலிக்கிறது
மூச்சு முட்டுகிறது
ஆனாலும் சுகமாய் இருக்கிறது
என் மூச்சுக் காற்றும் உனக்கே கிடைக்கிறதே...
என் சுவாசம் நின்றதென்று
யார் சொன்னது
நீ சுவாசிக்கும்
சுவாசத்தில்
நான் இருக்கிறேனடா......
என் நண்பா
சீக்கிரம் எனை தள்ளிவிடு
உனக்கு பாரம் குறையட்டும்....
உனக்கு அழுத்தம் குறையட்டும்.....
சுதந்திரம் கிடைக்கட்டும்.....
எனக்கு மிகப் பெரிய வரத்தை
என் மரணத்தை தந்துவிடு நண்பா....
நான் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறேன்
என் பிறவிப் பயனை அறுப்பதே
என் நண்பன் ஆயிற்றே....
அவனை பார்த்துக் கொண்டே உயிரை
விடுகிறேன்
என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி.....
இந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை....
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது தோழா.....
போகிறேன் தோழா......
~ பிரபாவதி வீரமுத்து