சதி செய்யும் சமூகம்

அன்பே!
உன்னையும் என்னையும் பிரிக்க
துடியாய் துடிக்கிறது...

உன்னப்பனும் என்னப்பனுமில்லை...
உன் சமூகமும் என் சமூகமுதான்...!

ஊரைக்கூட்டி
நம் உறவை
அசிங்கப்படுத்தும் முன்னே ...

நீயும் நானும் ஒன்றிணைந்து - இன்று
பதிவு திருமணம் செய்து கொள்வோம்
விரைந்துவாடி என் பின்னே..!
நீதாண்டீ என் கண்ணே!

உண்மையான நேசமிருந்தால் போதும்
இந்த சாதியும் மதமும்
தூயக்காதலை எப்படி பிரிக்க முடியும்?
சாதிதான் நமக்கு தடையென்றால்...
மனித சாதியை பிரித்த கடவுளும்
நமக்கு வேண்டாம் ..!
அன்பு காட்டத்தெரியாத
அஃறிணைக் கூட்டத்தோடு...
என்னைக்கும் நிம்மதி யாய்
சேர்ந்து வாழ முடியாது..!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Oct-16, 10:48 pm)
பார்வை : 165

மேலே