வாழ்க்கை

சூரியனின் கதிர்கள்

கடலுக்குள் கரைகிறது

நிலவும் ஓர்நாளில்

இரவில் கரைகிறது

கடலின் சோகங்கள்

மேகத்தில் கரைகிறது

இப்படித்தான்

என் கண்ணீர்த் துளிகள்

கவிதைகளில் கரைந்து போகிறது

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (25-Aug-16, 6:37 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 83

மேலே