காதல் அகராதி

காதலுக்குப்
பொருள் தேடினேன்
அவள் பெயரை
முதலில் காட்டியது
அகராதி
அவள் முகத்தைக் காட்டி
நடந்துசெல்லும்
அந்தாதி

கவிதைக்குப்
பொருள் தேடினேன்
அவள் பெயரை
முழுதும் காட்டியது
அகராதி
அவள் இந்த
குணாவின் மனதில்
காதல் விதை தூவிய
அபிராமி

அழகிற்குப்
பொருள்தேடினேன்
அவள் முகத்தை
முன்னாள் காட்டியது
அகராதி
அதைக் கண்டபின்பு
என் மனதிற்கு கிட்டியதோ
காதலெனும்
அகலாதீ ...

எழுதியவர் : குமார் (25-Aug-16, 7:01 pm)
பார்வை : 441

மேலே