என் செய்ய வேண்டுகிறாய்

என் செய்ய வேண்டுகிறாய்!!!!!

பழகிய நாட்களும்
பேசிய நொடிகளும்
நொடிக்கு நொடி
திரையிட்டு தொலைகிறதே!

உனக்கில்லையா?!!

உந்தன் உருவமும்
உருவத்தின் ஓசையும்
சிந்தையை சிதைத்து
நிலைகொள்கிறதே!

உனக்கில்லையா?!!

கலந்த நிலைகளும்
நிலைகளில் நிகழ்வுகளும்
நாட்களை நகர விடாமல்
நீட்டிக்க செய்கிறதே!

உனக்கில்லையா?!!

காதலர் தினமாம்!
நல்லதொரு நாளில்
யாரும் அறியாரென
காதலை புதைத்தாயே!

நிகழ்வுகளின் நிரூபணமாய்
உலவவிருக்கும் எனை
என் செய்ய வேண்டுகிறாய்!!!!!

எழுதியவர் : ரெட் சூரியா (25-Aug-16, 9:12 pm)
பார்வை : 185

மேலே