பிச்சைக்காரன் கல்லறையில்
![](https://eluthu.com/images/loading.gif)
இடுதட்டில்
சில்லறை கிடைக்காததால்
எனக்கு இடுகாட்டில்
கல்லறை கிடைத்தது
உணவு கிடைக்கவில்லை
என் தொண்டைக்குழிக்கு
உணவாய் வந்துவிட்டேன்
தோண்டிய குழிக்கு
அன்று
அனலோடு படுத்திருந்தேன்
ரோட்டில்
இன்று
மணலோடு படுத்திருக்கின்றேன்
கூட்டில்
இந்த ஆறடி நிலம்
கிடைத்திருந்தால் அன்று
புழுக்கள் கொழுத்திருக்காது
என்னுடலை மென்று
பூக்கள் கொழித்திருக்கும்
ஏழ்மைநிலை வென்று