இப்படிக்கு குழந்தை

அடம்பிடிப்பேன் கேட்டவை கிடைக்கும் வரை
அன்னை மடியில் அரசாங்கம் செய்வேன் நான்

ஆயிரம் செல்வம் இருந்தாலும் குடும்பத்தினர்
ஆணவம் கொள்ளும் செல்வம் நான்

இதயம் எனும் இவ்விடத்தில்
இறுமாப்பு இன்னாது கொண்டிராதவன் நான்

ஈசுவை இல்லாதவணனும்
ஈன்ற தாய் தந்தையை மகிழிச்சி
ஈரத்தால் நனைப்பவனும் நான்

உதடுகள் அனைத்தையும் என் கன்னத்தில் முத்தமிட
உலா வர செய்பவனும் நான்

ஊர்வல பவனி வருவேன் என் தந்தை முதுகில்
ஊன்றிய கைகளுடன் உற்சாகமாய் நான்

எழிலுக்கு எழில் சேர்ப்பவனாகவும்
எட்டு நல்லெண்ணங்களையும் ஒரு சேர கொண்டு இருப்பவன் நான்

ஏங்கும் எனை இடுப்பில்
ஏற்ற மாதர் குலம் யாவும்
ஏமாறுவேன் யாரையும்
ஏமாற்ற மாட்டேன் நான்

ஐ எனும் தமிழ் சொல் அகராதியில் அழகன் அரசன் நான்

ஒன்றும் அறியாதவன் நான்
ஒரு நொடி அழுகையால் எல்லாம் பெறுபவன் நான்

ஓமலிப்பு கொள்ளும் அழகன் நான்

ஓளவை எனை பார்த்தால் முருகனை விடுத்து வரிசை படுத்தியிருப்பார்
என் அழகை

இஃதே போதும் என் அடையாளத்துக்கு


நான் யார்? = குழந்தை

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (26-Aug-16, 5:35 pm)
Tanglish : ipadikku kuzhanthai
பார்வை : 80

மேலே