பிஞ்சு

காலை கதிரவன் ஒளி வீசும் முன்னே ;
வெட வெடத்த நடை பயணமாய் ,
பெற்றோரின் துயர் துடைக்க ,
கையெல்லாம் மையாய் இருக்க வேண்டிய பருவத்தில் ,
ஐயோ !!
செத்த பிணத்தின் அருவருப்பு '
போதுமடா சாமி அவர்கள் நிலை .
அதை பார்க்க என் இமை இடம் கொடுக்கவில்லை ,
எங்கனம் ?
இங்கனம் ;
இவ்வொன்றே
அடிகளாய் அடிமைகளாய்
காலோங்கிற்றே !!!!
இனியும் சுதந்திர பேச்சு வீண்தானோ !
புண்ணாய் இருப்பவர் நெஞ்சம்
புத்துணர்வு பெறட்டும் .......
செய்வோம் !!!
முதன்மை மேல் நின்று
அவர்கள் நிலை மாற
செய்வோம் !!!
பின்பு ஏற்புரை ஏற்றுவோம் !
சுதந்திரம் இங்கே ! என்று ...

எழுதியவர் : நா நவீன்பாலமுருகன் (29-Aug-16, 10:10 pm)
பார்வை : 467

மேலே