கஜினி முகம்மது அரசனாகிய கதை

கவுதமி ஆற்றங்கரையில் ஓர் அக்கிரகாரம். அனைவரும் வேத, வேதாங்க சாஸ்திரப் பண்டிதர்கள். மிகவும் செழிப்புடன் அக்கிரகாரவாசிகள் வாழ்ந்து வந்தனர். அந்த அக்கிரகாரத்தில் நாராயண சர்மா என்றொரு அந்தணர், தனது தர்மபத்தினியாகிய சோவிதம்மாளுடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ராமசர்மா என்றொரு புத்திரன். அவனுக்கு ஏழாண்டில் உப நயனம் செய்வித்து குருகுலத்தில் வேத சாஸ்திரங்கள் கற்க சேர்த்துவிட்டார்.

துஷ்ட சகவாசம்

அவன் குருகுலத்தில் இருக்கும்போதே வித்தைகள் கற்று முடியும் முன்பே, உலக அனுபவம் ஏற்படும் முன்பே தாய் தந்தையர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தனர். மரணமடைவதற்கு முன் அவனைத் தாய்மாமனிடம் ஒப்படைத்து அவனைப் பாதுகாத்து வருமாறு வேண்டினர். ராமசர்மாவை விட அவனது சொத்தில் அக்கறை கொண்ட தாய்மாமன் அவனது கல்வியைத் தடை செய்து, வாய்க்கு வந்த படி திட்டி வளர்க்க, சிறுவயதிலிருந்து அவன் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு துஷ்ட சகவாசம் கொண்டு திரியலானான்.

காசி யாத்திரை

ஆனால், அவன் மீது அக்கறை கொண்ட அவனது உற்றார் உறவினர் அவனுக்கு நல்லுரை வழங்கிட, அவன் மனம் மாறி மேலும் கல்வி கற்றிட காசிக்குச் சென்றான். அங்குக் காசிவிசுவநாதரைத் தரிசிக்க ஆலயத்திற்குச் செல்ல அங்கு வடவாயிலில் ஒரு பெயர்ப்பலகையைக் கண்டான். அதில் கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டிருந்தது. காசியிலுள்ள கங்கை நீரை எடுத்துச் சென்று ராமேசுவரத்தில் உள்ள ராமேச்வரனுக்கு அபிஷேகம் செய்து, அங்கிருந்து கடல் நீரைக் கொண்டு வந்து எனக்கு (விசுவநாதருக்கு) அபிஷேகம் செய்தால் உலகை ஒருமுறை சுற்றிவந்த பலன் கிடைக்கும். மும்முறை பூமியைச் சுற்றிய பலன் பெற்றவர் முன் நான் காட்சி தந்து வேண்டிய வரத்தை அளிப்பேன்-காசி விஸ்வநாதன். உடனே ராமசர்மா ஒரு காவடியில் இருபக்கமும் இரண்டு கலசங்களில் கங்கை நீருடன் ராமேசுவரம் சென்று ராமேச்வரனுக்கு அபிஷேகம் செய்து, அங்கிருந்து கடல் நீரை கொண்டு வந்து காசி விச்வநாதருக்கு அபிஷேகம் செய்தான். இவ்வாறு இருமுறை வெற்றியுடன் நடைபெற்றது. ஆனால் மூன்றாவது முறை ராமேச்வரத்திலிருந்து கொண்டு வந்த நீர் காசிக்கருகில் வரும் போது கீழே கொட்டிவிட்டது. மறுபடியும் அவன் முயற்சி செய்ய அப்போதும் அவ்வாறே நீர் தரையில் போயிற்று. இதனால் கோபம் கொண்டான் ராமசர்மா.

ஒரு தடியுடன் விச்வநாதரை அணுகி தலையைப் பிளந்து, நிராசையுடன் தன் தலையையும் பிளந்து கொள்ள எண்ணிப் புறப்பட்டான். அப்போது விச்வநாதர் அசரீரியாய் ஒலித்தார். என்னை அடிக்க வேண்டாம். நீ இருமுறை செய்த அபி÷க்ஷகத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனவே உனது அடுத்த பிறவியில் உன்னைச் சக்கரவர்த்தி ஆக்குகிறேன். ஐயம் கொள்ளாமல் என் பேச்சைக் கேட்டு வீடு திரும்புவாயாக என்றது அசரீரி.

மறுபிறவி

ஓர் அந்தணனுக்கு உபநயனம் ஆனவுடன் இரண்டாவது பிறவி வருகிறது. ஏற்கனவே உபநயனம் ஆன தான் மரணம் அடைந்தால்தான் இரண்டாவது பிறவி (அ) சந்நியாசியானாலும் மறுபிறவி எடுத்ததாகும். இவ்வாறு எண்ணிய அவன் மறுநாள் காலையில் மணிகர்ணிகா கட்டத்திற்குச் சென்று நீராடி, அனுஷ்டானம் முடித்துக் கொண்டு புறப்படுகையில் அபரசங்கரர் என்ற பெயர் கொண்ட கீர்த்திவாய்ந்த மகான் எதிரில் பட்டார். அவரை வணங்கி தனக்கு ஆதுர சந்நியாசம் வழங்குமாறு வேண்டினார். (அதாவது மிகமுக்கியமான சமயம் (அ) மரண வேளையில் பெறும் சந்நியாசம்) அப்போது அவர் கேட்ட பல வினாக்களுக்கு ராமசர்மா தகுந்த விடைகள் அளிக்க, அவர் மகிழ்ச்சியுற்று ஆதுர சந்நியாசத்துக்காக ஒப்புதல் அளித்து உபதேசம் செய்தார்.

தியானத்தில் ஆழ்தல்

உடனே அவன் ஆலயம் சென்று பரமனிடம் சாஸ்திரப்படி நான் ஆதுர சந்நியாசம் பெற்ற மறுபிறவி அடைந்தேன். எனவே எனக்கு வாக்களித்தபடி சக்கரவர்த்தி ஆக்கு என்றான். பரமன் என்னை அச்சுறுத்தி வரம் பெற ஆசைப்படுகிறாய். நான் வாக்குக் கொடுத்தது, கொடுத்ததுதான். நீ கமண்டலம், தண்டம், காஷாய உடை அனைத்தையும் கங்கையில் எறிந்துவிட்டு ஆற்றின் பிரவாகத்தை எதிர்த்துக் கொஞ்ச தூரம் நடந்து செல். அங்கொரு வடவிருட்சம் (ஆலமரம்) காணப்படும். அதன்கீழ் அமர்ந்து என்னைத் தியானித்தால் உனக்கு ராஜயோகம் கிடைக்கக் காரணமாகும் என்றார். அவனும் அவ்வாறே செய்து தியானத்தில் ஆழ்ந்தான்.

யவன மன்னன் ஆதல்

கங்கை ஆற்றுக்கருகில் ஒரு முகம்மதிய ராஜ்யம் இருந்தது. அதன் சுல்தான் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டான். அந்நாட்டு வழக்கப்படி மந்திரிகள் ஒரு யானையிடம் மாலை ஒன்றைக் கொடுத்து ஓட்டிச் செல்கையில் அது பல இடங்களில் திரிந்துச் சென்று இறுதியில் கங்கைக் கரையை அடைந்து அதன் கரையில் வடவிருக்ஷத்தின் கீழ் தியானத்திலிருந்த ராமசர்மாவின் கழுத்தில் போட்டு அவனை யவன மன்னன் ஆக்கியது.

யவன மன்னன் வாழ்க்கை

பின்னர் அந்த யானை ராமசர்மாவை தன் மீது உட்கார வைத்துக் கொண்டு அரண்மனையை அடைய மந்திரி, பிரதானிகள் மற்றும் பலர் அவனை வரவேற்று அவனுக்கு ராஜ்யாபி÷க்ஷகம் செய்து வைத்தனர். அவனுக்குக் கஜினி

எழுதியவர் : (30-Aug-16, 2:02 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1171

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே