மருத்துவம் - இந்தியா

அன்பு நண்பர்களே,

முன்பெல்லாம், மருத்துவமனை என்றால் உயிர் காக்கும் மருத்துவர்களை பற்றித் தான் நினைவு வரும். ஆனால் இன்று மருத்துவமனை என்றவுடன் கையில் இருக்கும் பணம் தான் நினைவுக்கு வருகிறது. காரணம் மருத்துவமனைகளில் அவர்களால் வசூலிக்கப்படும் தொகை தான். அதிக மதிப்பெண் பெரும் ஒருவனிடம் அவனுடைய லட்சியம் என்ன என்று கேட்டு பாருங்கள். அவன் உடனே மருத்துவராக வேண்டும் என்பான்.

காரணத்தை அறிய முற்பட்டால் நீங்கள் முட்டாளாக்கப்படுவீர்கள். அவன் பொதுசேவை செய்ய வேண்டும், நாட்டுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதனால் மருத்துவராக ஆசைப்படுகிறேன் என்பான். இது நல்ல ஒரு கொள்கையாக இருந்தாலும் அவனுடைய மனதில் இருப்பதை நாம் அறிய முடியாது. அவன் பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல தொழில் என்று நினைக்கிறானோ? அல்லது சேவை செய்ய கூடிய ஒரு வாய்ப்பு என்று எண்ணுகிறானா? உங்களுக்கு தெரியாது.

பிறகு கல்லூரியில் சேரும் பொது அவன் செலுத்தக்கூடிய தொகையை கணக்கிட்டு கொண்டு படிக்கிறான். அவன் பெற்றோரும் அவன் படித்து முடித்தவுடன் எந்த மருத்துவரிடம் அல்லது மருத்துவமனையில் இவன் சேர்ந்து பயிற்சியெடுத்தால் இவனால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று திட்டம் தீட்டுகின்றனர்.

ஐந்து வருட கல்வியில் நான்காம் வருடம் முடிந்ததும் கல்லூரி நிர்வாகம் பயிற்சியெடுப்பதற்காக அவர்களை ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ அல்லது கிராமப்புற சுகாதார அலுவலகங்களிலோ பணி அமர்த்துகின்றனர். கிராமப்புறங்களில் பயிற்சியெடுக்கும் மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக திகழ்கின்றனர். காரணம், அங்கே சுகாதாரமற்ற நிலையால் உருவாகும் நிறைய நோய்களை பற்றி ஆய்வு செய்வதற்கு அவர்களுக்கு சிறந்த தொழில்நுட்பக்கூடமாக மாறிவிடுகிறது.

பயிற்சி முடிந்ததும் கிராமப்புற நோயாளிகள் வந்தால் அவர்களை கண்டுகொள்வதில்லை. காரணம் அவர்களிடம் பணம் குறைவு. இன்னும் சில மாணவர்கள் கிராமப்புற பயிற்சி அளித்தால் அதை அவர்கள் விரும்புவதில்லை. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் எடுத்துக்கொள்ளும் முதல் உறுதிமொழி, நோயாளிகளிடத்தில் கனிவுடன் நடந்து அவர்களுடைய பிணியை நீக்குவதில் கவனம் செலுத்துவேன் என்பதே. ஆனால் இன்று 100க்கு 1 சதவீதம் கூட மருத்துவர்கள் அந்த உறுதிமொழியை நினைவில் நிறுத்துவதில்லை. காரணம் பணம்.

இப்படிப்பட்ட சூழலில் எப்படி நம்மால் சுகாதாரமான நோயற்ற இந்தியாவை உருவாக்க முடியும்? மனைவியின் பிணத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய அளவிற்கு மருத்துவ நிர்வாகம் நடந்து கொண்டால் அவர்களை எப்படி மனிதநேயம் மிக்கவர்கள் என்று கூற முடியும்? இன்று நான் படித்த நிகழ்வு, நோய்வாய்ப்பட்ட மகன் தன்னுடைய தந்தையின் தோளில் உயிர் விட்டிருக்கிறான். இதுவும் இந்தியாவில் தான். இதை எழுதும் போது துக்கத்தினால் ஏன் கண்களில் நீர் கசிகிறது.

இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால் நிறைய நிகழ்வுகளை தெரிந்துகொள்கிறோம். ஆனால் இதே போன்று ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நாம் கண் முன்னே நடந்தேறி இருக்கிறது. நமக்கு தெரியவில்லை அவ்வளவு தான்.

என்னுடைய கட்டுரை பிடித்திருந்தால் பகிரவும். உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். நன்றி!

எழுதியவர் : famakfana (30-Aug-16, 1:55 pm)
சேர்த்தது : பமாகேபனா
பார்வை : 759

மேலே