எச்சங்களே எனது செல்வம்
அடம் பிடிக்காமல்
பள்ளிக்கு செல்வது
வெள்ளிகிழமை மட்டுமே..!
அடுத்த நாள் விடுமுறை என்பதால்..!
ஞாயிறு இரவு பெரும்பாலும்
நடிப்புக்கு தயாராகும் இரவாகவே
இருக்கும்...!
அடுத்த நாள் காலை,
நடிகர் திலகம் தோற்றுப்போகும்
அளவிற்க்கு நடிப்பு இருக்கும்,
பள்ளி மறுப்பு போராட்டம்
சில அடிகளால் முடிவுக்கு வரும்,
அழுதுகொண்டு நான் அமரையில்
அருகில் என்னைவிட சத்தமாய் அழுவான் இன்னொருவன்..!
அவன் அழுகையே
எனக்கு ஆறுதல் மாத்திரை...!
கோடீஸ்வரர்னாய் நான்
வாழ்ந்த இடம் என் வகுப்பறை..!
நீ பெரியவனா..!
நான் பெரியவனா போட்டியெல்லாம்
சிலேட்டின் அளவே நிர்ணயிக்கும்..!
சிறு சேமிப்பு திட்டமெல்லாம்
சிலேடு குச்சியின் சேமிப்பில்
துவங்கும்...!
பாலினம் தெரியாமலும்
பாகுபாடு அறியாமலும்
பழக்கம் இருக்கும்...!
என் அத்தகைய செல்வங்களும் காலம் தின்று தீர்த்தது..!
அது மிச்சமிட்ட எச்சங்களாய்
அவற்றின் நின்னைவுகள்..!
அந்த எச்சங்களே
இப்போது மிச்சமிருக்கும் எனது செல்வங்கள்.....!