கடற்கரை கண்ணகிகள்-2
சென்னை மாநகரில்,
கண்ணகி சிலைக்கடியில்,
கவர்ச்சி உடையணிந்து
காத்திருந்தால் காதலனுக்கு..!
கையில் தடி ஊண்டி,
தாள்ளாடி நடை நடந்து
வந்து கை ஏந்தி பிச்சைகேட்டால்
மூதாட்டி...!
முனங்களுடன் கைப்பை திறந்து
உதட்டு சாயமெடுத்து உதட்டில்
தீட்டிக்கொண்டி ஒன்றுமில்லை
என கைவீசி சொல்லிவிட்டு
பைக்கில் பறந்தால் மற்றுமோர்
கடற்கரை கண்ணகி...!