வலியின் சுவடாய் மகிழ்ச்சியின் சாரலாய்

எழுத நினைக்கின்றேன்
எதுவும் தோணவில்லை....
கண்மூடி யோசித்தாலும்
கற்பனையில் நிற்கவில்லை...
முயற்சிக்கின்றேன்
முடியவும் இல்லை....
எத்தனையோ சோகங்களும்
சந்தோஷங்களும் எனக்குண்டு...
எழுதினால் நீண்டு கொண்டே போகும்
அந்த வானம் கூட போதாது
ஆனால்......
என்ன செய்வது
என்னால் எழுத முடியவில்லையே....!

எத்தனையோ காலங்கள்
கண்டதுண்டு....
என்னை நேசிப்பவரும்
பலருண்டு.....
அனைவரின் எண்ணங்களையும்
எழுத்தாய் உதிர்க்கும்
நான்....
நான் எண்ணுவதை
எழுதமுடியவில்லை......!

என் கண்ணீர் துளியாய்
மைத்துளிகள் காகிதத்தை
நனைக்கின்றன....
அவை
பல வண்ணங்களும் பெறுகின்றன....
கதையாய்...
கவிதையாய்...
பல பரிசும் பெறுகின்றன...!
என் மகிழ்ச்சியின் சாரலாய்...

என் எண்ணங்கள்
வலியின் சுவடானாலும்....
மகிழ்ச்சியின் சாரலானாலும்....
கண்ணீர் மட்டும் நிரந்தரமானது....
பலர் கற்பனையின் விருந்தை படைக்க.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (2-Sep-16, 12:23 am)
பார்வை : 81

மேலே