முதல் எழுத்து உ
![](https://eluthu.com/images/loading.gif)
நான் படைப்பதெல்லாம்
பட்டினத்தான் அருளாளே
எப்புகழ் கிடைத்தாலும்
அவனைச்சாரும்
ஏசுவதும் பேசுவதும்
என்னைச்சாரும்...!
எண்ணத்தை எழுத்தாக்கி
எழுத்தில் எடுத்துவைக்கிறேன்,
எண்ணத்தில் பிழையிருந்தாலும்
என் எழுத்தில் பிழையிருந்தாலும்,
எப்படியென்று தெரியாமல்,
என் கருத்தில் பிழையிருந்தாலும்
எடுத்துச்சொல்லுங்கள் என்னிடத்தில்,
எழுத்தில் முதல் எழுத்து...உ..!