உன் கையில் ஓர் உலகம்

மலரில் உறங்கும் பனித்துளிகள் போலவே
மடியில் கணினி உறக்கம் கொண்டதோ?...
மனம் திறந்து அதனோடு பேசுகின்றாய்
மனதையும் அதிலே வைத்துப் பூட்டுகின்றாயே......
பக்கத்து வீட்டின் முகங்களோ தெரியாது
பக்கத்து தேசத்திலும் உனக்கு நண்பர்கள்...
உன்னை எங்ஙனம் வசியம் செய்ததோ?...
கணினிக்கு காயமென்றால் காதலனாய் துடிக்கின்றாயே......
இரவும் பகலும் கணினியோடு இருக்கின்றாய்
விரல்களின் தீண்டலில் உலகத்தைப் புரட்டுகின்றாய்...
இமைகளின் விரிப்பில் உலகம் நுழைந்ததே...
இதழ்களின் சிரிப்பும் உலகைக் கடந்ததே......