ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம்..... பாகம் -10
ஒருநாள் பாடசாலை முடிந்து வந்த வினோ வயிற்றுவலி தாங்க முடியாமல் துடித்தாள்.பாவம் இந்த நேரம் பார்த்து மாலதி அக்காவும் இல்லத்தில் இல்லை.
செந்தளிர் இல்லமே கோலாகலமாகக் காணப்பட்டது. இரண்டு நாட்களுக்கு ஏதோ வேலை காரணமாக வேறு இல்லத்திற்கு சென்று திரும்பிய மாலதி அக்காவுக்கு எதுவும் புரியவில்லை. இல்லத்திற்கு உள்ளே வந்த மாலதி அக்கா வாசலில் நின்ற ஒரு பெண்ணிடம்
"என்ன விசேஷம் இல்லத்தில்......? "என்று கேட்டார். அதற்கு அப்பெண்,
"வினோ வயசுக்கு வந்து விட்டாள்...."என்று,
அதைக் கேட்டதும் மாலதி அக்காவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.உள்ளே சென்று பார்க்கும் போது; அங்கே வினோ சூரியனை கண்டு செந்தாமரை மலர்வது போல் மாலதி அக்காவைப் பார்த்து புன்னகை பூத்தாள்.
செந்தளிர் இல்லத்தில் ஒரு பெண் பிள்ளை வயசுக்கு வந்தாலே இப்படி தான் அவ் இல்லமே கொண்டாட்டம் காணும். அதற்கு பிறகு வினோ அவ்வில்லத்திலே சிறந்த மாணவியாகவும் எல்லா மாணவர்களுக்கும் உதாரணமாக காணப்பட்டாள்.
ஆனால் இது வேறு சில மாணவிகளுக்கு பொறாமையாக இருந்தது. நாட்கள் உருண்டோடின. அதன் பின் வினோ இல்லத்திலே மாணவிகளுக்கு தலைவியானாள்.
ஒருநாள் திடீரென மாலதி அக்கா வேறு இல்லத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் அவர் கண்களில் கண்ணீருடன் வினாவை விட்டு பிரிந்து சென்றார். வினா மனமுடைந்து காணப்பட்டாள். ஆனால் அவள் தன் கடமைகளை செய்ய மறக்கவில்லை. அனைத்து மாணவர்களுடனும் பாசமாக கதைப்பாள். அனைவருக்கும் உதவிகள் செய்வாள்.
இவளின் நிலை கண்டு பொறாமையுற்ற சில மாணவிகள் வினோவுக்கு எதிராக சதித்திட்டம் செய்ய திட்டமிட்டனர். அவளை இவ்வில்லத்தை விட்டு விரட்ட முடிவு செய்தனர்..................
தொடரும்...........