வீடு

அன்று எனக்கு வந்த கடிதங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் என் மனைவி மகேஸ்வரி என்னிடம் வந்தாள். கடிதத்தை வாசிப்பதை நிறுத்தி விட்டு அவளை அண்ணார்ந்து பார்த்தேன். ஏதோ முக்கிய விஷயம் பேச வந்திருக்கிறாள் என்று எனக்குத்; தெரிந்தது.

“என்ன ஈஸ்வரி? என்ன விஷயம்”

“உங்கடை அருமை மகள் கீதா எனக்குப் போன் செய்திருந்தாள்.”

“என்னவாம் அவள்.”

“தனக்கு குடும்பக் கஷ்டமாம். இரண்டு பிள்ளைகளோடு குடும்பத்தை நடத்தக் கஷ்டப் படுகிறாளாம்”.

“அப்படி என்ன அவளுக்கு கஷ்டம்?”

“உங்கடை மருமகனுக்கு வேலை போயிட்டுதாம்”.

“எப்ப இருந்து”

“வேலை போய் இரண்டு மாசமாம்”

“அதுக்கு இப்ப எனனை என்ன செய்யச் சொல்லுகிறாய்”?

“தன் உழைப்பிலும் மருமகனின் கொம்பனி கொடுத்த இறுதி பணத்திலும் தான் குடுமபம் நடத்துறோம் எண்டாள்;.”

“அவர் வேறு வேலை தேட வேண்டியது தானே”

“அவ்வளவு இலேசிலை வேலை கிடக்காதாம்”.

“தேடினால் கிடைக்கும்”.

“இரண்டு மாதம் மோர்ட்கேஐ; கட்டவில்லையாம். பாங்கிடம் முன்று மாதம் தவணை கேட்டிருக்கிறார்களாம்”.

“வீடு வாங்கும் போது ரிச்மெணட் ஹில்லில் இருக்கிற தண்டை சினேகிதிக்கு அருகே வாங்க வேண்டும் அதுவும் மூன்று அறைகள், தோட்டம், டபில் கராஜ் உள்ள வீடு தேவையென்று அவள் வாங்கினவள். அதுவும் நானூறு ஆயிரம் டொலர்களுக்கு. வாங்கும் போது மாதம் மாதம் மூவாயிரம்; டொலர் மோர்ட்கேஜ். கட்டமுடியுமோ என்று யோசித்திருக்க வேண்டும்” நான் அப்பவே சொன்னேன். குறைந்த விலையிலை இரண்டு ரூம் உள்ள தனி வீடாக இல்லாமல் மலிவான இடத்திலை பார்த்து வாங்கு எண்டு. நான் சொல்லக்கை கேக்கயில்லை அவள்”.

“வீடு வாஙகும் போது உங்கடை மருமகனுக்கு நல்ல வேலை. மாதம் பத்தாயிரம் மட்டில் சம்பளம் சலுகைகளோடை. கீதாவுக்கு கூட வேலையில் இருந்து மாதம் நாலாயரம் கிடைச்சது”.

“கனடாவிலை வேலை வரும். போகும். மருமகன் வேலை செய்தது ஒரு அமெரிக்கன் கொம்பெனி. ஆந்த கொம்பெனி இப்ப பிஸ்னஸ்சை டெக்சசுக்கு மாத்திப் போட்டாங்கள் எண்டு கேள்விப்பட்டனான். அதாலை; கனடாவிலை பிஸ்னஸ்சை மூடி போட்டாங்கள்.”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் அப்பா”?

“இலெல்லாம் உன் அண்ணர் தான் எனக்கு இரண்டு கிழமைக்கு முந்தி சொன்னவர். அப்பவே நான் யோசித்தனான் மருமகன் வேறு வேலை தேட வேண்டி வரும் எண்டு.. இப்ப வந்து நீ எனக்குச் சொல்லுகிறாய்”.

“அப்பா, நாங்கள் எதாவது பண உதவி அவளுக்கு செய்ய வேண்டும். மருமகனுக்கு வேலை கிடைககும் மட்டும். எங்களுக்கு இருக்கிறது ஒரே பிள்ளை அவள்.;” ஈஸ்வரி சொன்னாள்.

“என்னிடம் எங்கை பணம், எங்கள் இரண்ட பேருக்கும் கிடைக்கிற பென்சன் தான் எங்களுக்கு வருமானம். அதிலை நாங்கள் கண்ணை மூடினால் எங்கடை செத்த வீட்டுச் செலவுக்கு அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்க, இரண்டு பேருக்கும் இன்சுரன்ஸ் பொலிசி எடுத்து வைச்சருக்கிறன். அதை இப்ப சரண்டர் பண்ணினால் இவ்வளவு காலம் கட்டின ப்ரிமியக் காசை விடக் குறைந்த காசு தான் கிடைக்கும்”.

“அவள் ஒரு வருஷத்துக்கு முந்தி எங்கள் இரண்டு பேரையும் தங்கடை வீட்டு பேஸ்மண்டிலை வந்திருக்க சொல்லி கேட்டவள். தங்களுக்கு மோர்ட்கேஜ் கட்ட உதவும் எண்டு. நீங்கள் தான் இந்த சீனியர்ஸ் அப்பாரட்மெண்டை விட்டு வெளிக்கிட முடியாது என்று சொன்னியள். பாவம் அவள் கீதா. எங்களுக்கு இருக்கிறது அவள் ஒருத்தி தான் பிள்ளை எண்டதை மறந்திட்டியளே”.

“அதுக்கு என் மேலை பழி போடுறியோ?”

“நான் ஒண்டு சொல்லட்டே. கோவியாமல் கேக்கிறியளே?”

“சொல்லு கேட்கிறன்”.

“எனக்கு சீதனமாக வந்த வீடும் காணியும் யாழ்ப்பாணத்திலை நல்ல இடத்திலை இருக்கு”.

“அதுக்கு”..

“எங்களுக்கு பிறகு அந்தச் சொத்து கீதாவுக்குத் தானே.”

“உனக்குத் தெரியுமா அந்தக் காணியாலை பிரச்சனை எண்டு”.

“என்ன பிரச்சனை? உங்கடை கிட்டத்துச் சொந்தக்காரர் கணபதிபிள்ளையருக்கு தானே வீட்டிலை வாடகை;கு இருக்க கொடுத்துப் போட்டு வந்த நீங்கள். மாதம் மாதம் மூவாயிரம் ரூபாய் வாடகை காசை உங்கடை பாங் கணக்குக்கு அனுப்பினவர்.”.

“ஆர் உமக்கு உதைச் சொன்னது”?

“எனக்கு யாழ்ப்பாணத்திலை உங்கடை பாங்கிலை வேலை செய்கிற என் தம்பி தான் எழுதினவன்”.

“அவனுக்கு தெரியுமே அந்த வீட்டாலை நான் இப்ப படுகிற கஷ்டம்”.

“அப்படி என்ன கஷ்டம் அப்பா”?

“அந்த காணியையும் வீட்டையம் நல்ல விலைக்கு இங்கை கேட்கினம். டோலரிலை தருவினமாம்”.

“அப்ப அதை வித்துப்போட்டு அந்த காசை கீதாவுக்கு மோரட்கேஜ. பணம் அரைவாசியை கட்டக் கொடுக்க வேண்டியது தானே. வித்தால் நல்ல காசு கிடைக்குமே”.

“உண்மை தான் கிட்டதட்ட 200,000 டொலர்கள் மட்டிலை வரும். ஆனால்..”;
“ஆனால் என்ன?”

“அவன் கணபதி வீட்டை விட்டு எழும்பமாட்டானாம். இரண்டு வருஷமாக அவன் வாடகையும் தரயில்லை.”

“கேஸ் போட்டு ஆளை எழுப்ப வேண்டியது தானே”.

“என்ன விசர் கதை கதைக்கிறாய். நாங்கள் இங்கை கனடாவிலை இருந்து கொண்டு கேஸ் எப்படி அங்கை நடத்துகிறது”?

“அங்கையிருக்கிற எண்டை தம்பிக்கு பவர் ஒப் அட்டர்னியை கொடுங்கோவன் கேஸ் நடத்த“.
“பவர் ஒப் அட்டர்;னி கொடுத்து பிறகு இன்னொரு சிக்கலில் மாட்டுப்பட நான் தயாராகயில்லை.”
“அப்ப காணிவிக்க என்ன செய்வதாக உத்சேம்”?

“அவன் காணபதி வீட்டின் பெறுமதியில் கால்பஙகு தனக்குத் தந்தால் தான் வீட்டை விட்டுப் போகச் சம்மதமாம்”

“நல்ல இருக்கு கதை இரண்டு வருஷம் வாடகையும் தரயில்லை . தோட்டதில் இருக்கிற மரங்களில்; கிடைத்த பயன்களையும் அனுபவித்த பிறகு இப்படி அவன் சொல்வது சரியான அடவாடித்தனம்” என்றாள் ஈஸ்வரி.

“உனக்குத் தெரியுமா காணியையும் வீட்டையும் அம்மோ என்று விட்டு விடடு இங்கு வந்த பலருடைய சொத்துகளுக்கும் அதே கதிதான்”.

“உது நல்லாய் இருக்குது கதை”

“நீங்கள் உங்கை கனேடியன் சிட்டிசன். உங்களுக்கு ஏன் இங்கை ஊரிலை வீடு காணி தேவை எண்டு ஊரிலை கேக்கினம்”.

“கேப்பனம் கேப்பினம.; அவையளுக்கு அனுபவிக்க கிடைச்ச சும்மா காணிதானே.” ஈஸ்வரியின் குரலில் கோபம் தொனித்தது.

“நான் கணபதியை வீட்டை விட்டு எழுப்பித் தரும்படி இயக்கத்துப் பெடியன்களை கேட்டுப்; பாக்கிறன். ஆனால் அவங்களுக்கும் கொஞ்சம் காசு கொடுக்கத்தான் வெண்டும்”.
.
“ஏதோ எது சரியெனப் பட்டதை செய்யுங்கள். கெதியிலை சொத்தை வித்து அவள் கீதாவுக்கு காசை கொடுங்கள். இல்லாட்டால் அவள் வீட்டை பாங் எடுத்துவிடும். அது வேறை அவமானம்.”
தன் கருத்தைச சொல்லிப்போட்டு ஈஸ்வரி அறைக்குள் போனாள்.

சில நாட்களுக்கு பின்னர் ஒரு நாள் டேலிபோன் மணி அடித்தது. கீதாவாக இருக்கும் என நினைத்து போனை எடுத்தேன்.

“அழைத்தது என் நண்பன முருகேசு.. நாங்கள் இருவரும் ஒன்றாக யாழ்ப்பணாக் கச்சேரியில் வேலை செயதவர்கள்’.

“என்ன முருகேசு என்ன இந்த நேரம் கோல் செய்தனீர்”.

“விஷயம் கேள்விப்படடீரே?”

“ நீர் சொன்னால் தானே தெரியும்”.

“யாழ்ப்பாணத்திலை இருந்து புலிகளைத் துரத்த தாறு தாறு மாறாக ஆமி குண்டு போட்டதிலை உமது வீடு சரியாக பாதிக்கப்பட்டு விட்டுதாம்”.

“ என்ன முருகேசு சொல்லுகிறீர்”

“உண்மை தான் சொல்லுகிறன். எனக்கு கொழும்;பிலை இருந்து எண்டை மச்சான் மோகன் போன் செய்தவன். அவனுக்கு உம் வீட்டையும் அதிலை இருந்த உமது சொந்தக்காரர் கணபதியையும் தெரியும்”.

“அப்போ கணபதி குடும்பம்”?

“அவையள் குடும்பம் வீட்டோடை சரியாம்”

என்னால் பேசமுடியவில்லை. நான் கேட்ட போது வீட்டை விட்டுப் போய் இருந்தால் கணபதி குடும்பத்துக்கு இக்கதி ஏற்பட்டிருக்குமா? என் மனம் சொல்லிற்று.

ஈஸ்வரி நான் பேசவதை கேட்டுவிட்டு வந்தாள்.

“யார் அப்பா போனிலை”?

“அவன் எண்டை பிரண்ட் முருகேசு கதைச்சவன்”

“என்னவாம் முருகேசு போனிலை.”

“எங்கடை வீட்டை ஆமி குண்டு போட்டு டமேஜ் பண்ணி; போட்டாங்களாம். கணபதி குடும்பமும் வீட்டோடை சரியாம்”.

“அய்யோ கடவுளே. இனியாவது காணியை வீடில்லாமல் குறைந்த விலைக்காவது விக்கப் பாருங்கள். என்ன”?

எனக்கு அவள் சொன்ன வார்த்தைகள் எரிகிற வீட்டிலை சுருட்டு பற்ற வைத்தது போல் இருந்தது.

******

:

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (4-Sep-16, 6:34 am)
Tanglish : veedu
பார்வை : 256

மேலே