நாளை உன் பிறந்தநாள்
நாளை உன் பிறந்தநாள்
அதனால் நாளை பூமிக்கு
விடுமுறை அளிப்பேன்
பூமியின் மேல் ஒரு மாளிகை கட்டி
பெரிய விருந்தொன்று ஆயத்தம் செய்வேன்
இயற்கைக்கு அழைப்பிதழ் கொடுத்து
இறைவனை விருந்தினராய் அழைத்து
உன்னை ஆசீர்வதிப்பேன்
வானவில்லை ஆடையாய் நெய்து
விண்மீன்களை கொண்டு ஆபரணங்கள்
செய்து
நிலவை சின்னதாய் சுருக்கி
உன் நெற்றியில் பொட்டாய் ஒட்டி
உனக்கு ஒப்பனை செய்ய
தேவதைகளை வரவழைப்பேன்
உன் கூந்தல் நனைத்திடவே
கோடி பூக்கள் கொண்டு
ஒரு குளியல் அறை ஒன்று செய்வேன்
நனைந்த உன் கூந்தல் துவட்ட
நீல வானத்தில் ஒரு பாதியை
வெட்டி உனக்கு துவாலயாய் கொடுப்பேன்
உன் இடையில் என் கை பட
மெல்லமாய் அருகில் உன்னை இழுத்து
உன் நெற்றியில் முத்தம் இடுவேன்
உன் மார்பில் என் தலை சாய்த்து
பல ஜென்மம் களிப்பேன
உன் இமைகளில் வீடு கட்டி
அங்கே நான் வசிப்பேன்
ராத்திரியில் உன் விழிகளுக்குள்
கனவுகளாய் வந்து போவேன்
சாகா வரம் ஒன்று தேவனிடம் கேட்டு
அதை உனக்கு பரிசளிப்பேன்
நான் இறந்தாலும்
நீ வாழவேண்டும்
நீ இருந்தால்
நம் காதல் வாழும்
காதலோடு நானும்
உன்னோடு சேர்ந்தே வாழ்வேன்
அது போதும் சகியே
வேறென்ன வேண்டும் எனக்கு .
அ .ஏனோக் நெஹும் .