காதல் தவழும்

ஏனோ என் மனது
உன்னை தேடும்
காணும் பொழுதெல்லாம்
நெஞ்சில் ஆயிரம்
பூ பூக்கும்

உன் மனதினில்
இடம் கேட்டு
பல மனுக்களை
நான் கொடுப்பேன்
என் மனுவத்தை
ஏற்றுக்கொண்டால்
என் மனமதை பரிசளிப்பேன்

உந்தன் மடியே
நான் விரும்பும்
ராஜ்யமே

உந்தன் நினைவில்
தினம் ஆடும் என்மனமே

பூவை உந்தன் புன்னகை
பார்த்தால் கோடி ஆனந்தமே

கண்ணின் வார்த்தைகள்
கவிதை கோர்க்குதே

கனவில் நீ வர
தூக்கம் பிடிக்குதே
கனவினில் நீ வந்தால்
ஏக்கம் பெருகுதே

உன்னை சேராமல்
உயிரும் பிரியாதே

நான்
நீ
நாமானால்
இன்பமும் பேருகுமே

காதல் அடையாளம்
கையில் தவளுமே

ரா தி ஜெகன்

எழுதியவர் : (4-Sep-16, 3:02 pm)
Tanglish : kaadhal thavalum
பார்வை : 132

மேலே