நான் இல்லாமல் நீ இல்லை

நீ அமர நாற்கலியாக உள்ளேன்
நீ எழுத மேசையாக உள்ளேன்
நீ உறங்க கட்டிலாக உள்ளேன்

உன் வீட்டில் கதவாக உள்ளேன்
உன் கையில் எழுதுகோலாக உள்ளேன்
உன் முதுமையில் ஊன்றும்கம்பாக உள்ளேன்

இப்படி பல வகையில் உதவுகிறேன்
வெட்ட மட்டும் செய்கின்றாயே என்னை
ஒரு முறையாவது விதைக்கமாட்டையா....

எழுதியவர் : Maharaj (4-Sep-16, 7:41 pm)
பார்வை : 1549

மேலே