மகாராஜ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மகாராஜ்
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  29-Nov-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2016
பார்த்தவர்கள்:  323
புள்ளி:  19

என்னைப் பற்றி...

மாணவர் - இளம்அறிவியல் (இயற்பியல்)

என் படைப்புகள்
மகாராஜ் செய்திகள்
மகாராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2017 7:29 pm

குயிலிடம் நாதத்தை கற்றவன்
காக்கையிடம் ஒற்றுமையை கற்கவில்லை

நரியிடம் ஏமாற்றுவதை கற்றவன்
நாயிடம் நன்றியை கற்கவில்லை

கோழி போல உண்ண கற்றவன்
குருவியிடம் சுறுசுறுப்பை கற்கவில்லை

மாடு போல உழைக்க கற்றவன்
மனிதனாய் வாழ கற்கவில்லை...............!!!!!!!!!!!!!!!

மேலும்

மகாராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2017 8:06 pm

எல்லா டீக்கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. `மூணு பத்து ரூபா’ என குட்டியூண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு. சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்து, டீ குடிக்காத தமிழ் ரசிகர்கள் வெகு குறைவு. மதுரைப் பக்கம் வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்துப் பரிமாறப்படும் `சமோசா’, அலாதிச் சுவைகொண்டது. சென்னை சௌகார்பேட்டை பகுதியில் மொறுமொறு சுவையுடன் பச்சைச் சட்னி, சாஸுடன் கிடைக்கும் வட இந்திய வகைக்கு, பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் பல இடங்களில் சமோசா-சுண்டல் காம்பினேஷனுக்கு மயங்கிக்கிடக்கிறவர

மேலும்

மகாராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2017 5:24 pm

கலிபோர்னியாவில் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் கண்ணனுக்கு தென்படுவது கோல்டன் கேட் பாலத்தின் சிவப்பு கோபுரங்கள்தான். உலகிலேயே மிக அழகான பாலம் என்று கருதப்படுகிறது. சான் பிராசிஸ்கோ குடாவையும் பசிபிக் மாகடலையும் இணைக்கும் கோல்டன் கேட் ஜலசந்தியின் குறுக்கே கட்டப்பட்டது இந்த பாலம். ஒற்றைப் பாவளவு கொண்ட நீளமான தொங்கு பாலங்களில் மூன்றாவது இது.

இந்த பாலத்தை வடிவமைத்து கட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை வடிவமைத்தவர் "ஜோஸப் பேயர்மான் ஸ்ட்ராங்" எனும் அமெரிக்கப் பொறியியலார். 1934ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1937ஆம் ஆண்டு முடிவடைந்தது. உலகின் முதல் பிரமாண்டமான

மேலும்

மகாராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2017 7:04 pm

"இரும்புச் சீமாட்டி" என்று அழைக்கப்படும் ஈபில் கோபுரம் பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 1889ஆம் ஆண்டு நடந்த கண்காட்சிக்காக அமைக்கப்பட்டது. முழுவதும் இரும்பினாலும் எக்கினாலும் கட்டப்பட்ட இதை வடிவமைத்தவர் "அலெக்சாண்டர் குஸ்தாவ் ஈபில்" எனும் கட்டடக் கலைஞர். ஆரம்பத்தில் இதைக் கட்டுவதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது.

பாரிஸ் நகரில் "சாம்ப் - டி - மார்ஸ்" எனுமிடத்தில் மேற்கு முனையில் அமைந்துள்ள இதன் உயரம் 300 மீட்டர்கள். இதன் மேல் ஏறி நின்று பார்த்தால் 80 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். இந்த கோபுரத்தை நான்கு இரும்பு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவை ஒரு பெரிய வ

மேலும்

மகாராஜ் - ப சண்முகவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2016 9:24 pm

# விளம்பரங்களில் நடிக்கும் முன்னாள் நடிகைக்கு (ம) நடிகருக்கு விளையாட்டு வீரருக்கு 30 நிமிடம் தான் அதற்கு 1,கோடி முதல் 250,கோடி அதற்கு மேல் .இப்பாணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு (அ ) மருத்துவமனைக்கு ,இப்பாணத்தை கொடுக்கலாம் உங்கள் கருத்து ?
# இப்போது அரசங்க வேலைக்கு 5,கோடியில் இருந்து 15,கோடி அதற்கு மேலும் கொடுத்தால் தான் 8,000, 10,000-ல் அரசு வேலை இந்த நிலை மாறுமா ?
# லஞ்சம் கொடுத்தல் தான் எல்லா துறைகளிலும் வேலை நடை பெறுகிறது.?

மேலும்

இந்தியாவிலுள்ள செல்வந்தர்கள் முயன்றிருந்தால் இந்தியாவை நிச்சயம் பெருமைப் படுத்தியிருக்கலாம்.. சுயநலம், பேராசை, பெருமை, ஆடம்பரம் - இவற்றிலேயே பல செல்வந்தர்கள் மூழ்கியிருக்கின்றனர்.. என்ன செய்வது? இன்றைய இளம் சமுதாயத்தினரை நேர்வழிப்படுத்தினால்தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம் தழைக்கும்.. இளைஞர்களிடத்தில் "இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற கொள்கையை நம்மால் இயன்றவரையில் பரப்புவோம்.. 14-Dec-2016 8:35 pm
முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமாணம் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் இவ்வாறாக ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி சம்பாதிக்கும் நூறு பணக்காரர்கள் இந்தியாவில் தான் உள்ளனர் , மற்றும் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது ,நூறு வருடத்திற்கு முன் அன்னைதெரசா இந்தியாவிற்கு வரும்போதும் சாக்கடைக்கு அருகில் தான் அதிக இந்திய மக்கள் தங்கியிருந்தனர் ,நூறு வருடத்திற்கு பிறகும் எதுவும் மாறவில்லை இப்போதும் கூவத்திற்கு அருகிலும் சாலையோரங்களிலும் வாடகை வீட்டிலும் தான் கோடிக்கனக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர் மற்றும் முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் . லஞ்சம் கேட்டால் அந்தந்த மாவட்டத்திலுள்ள லஞ்ச ஒழிப்பு துறையை அனுகுங்கள் 10-Sep-2016 8:16 pm
உங்கள் கேள்வி சரிதான் நண்பரே.. ஆனால் இதற்கு ஒரே பதில் தான்.மனிதனின் ஈடுபாடே ஆகும். 09-Sep-2016 4:57 pm
குடும்பம்தான் வாழ்க்கை. 09-Sep-2016 10:44 am
மகாராஜ் - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2016 12:28 pm

தமிழக ஆளுனராக 4 ஆண்டுகள் பதவிவகித்த ரோசய்யா, அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். இந்த 4 ஆண்டுகளில் அரசு பணத்தை அவர் எவ்வளவு செலவு செய்தார் என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கேட்டுப் பெற்றுள்ளார்.
அதன்படி, இந்த 4 ஆண்டுகளில் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை பராமரிக்க ரூ. 1.27 கோடி ஆகியுள்ளது. ரூ.36.24 லட்சம் மின்சார செலவு ஆகியுள்ளது.
4 சொகுசு கார்கள், ஒரு மோட்டார் பைக் ஆகியவை சுமார் ஒரு கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. 36 லட்ச ரூபாய்க்கு தொலைபேசிக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆளுனரின் பயணச் செலவு ரூ.1.22 கோடி 470 முறை விமானத்தில் அவர்

மேலும்

ஏனெனில் இந்தியா ஏழை நாடு 10-Sep-2016 7:49 pm
கேள்விகள் இன்றி கேட்டப் பணத்தை மறுக்காது கொடுக்கும் அரசு கஜானா செயல்படும் வரை இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறும் . பல பெருந்தலைவர்கள் வாழ்க்கையை போற்றி மாலையிட்டு கும்பிடும் தற்போதைய தலைவர்கள் அவர்களது கொள்கைகளையும் சேர்த்து குழியில் போட்டு மூடிவிடுகின்றனர். ஒருவராவது அவர் போன்று வாழவேண்டும் என்று இதுவரை எண்ணியதே இல்லை .அவர் வழிகளை மதிப்போம் . அவரது வாழ்வை மண்ணில் போட்டு மிதிப்போம். இதுவும் கூட ஒரு சில தலைவர்களின் தாரக மந்திரங்களாகின்றன நாம் காணும் சமூகத்தில்----------- 08-Sep-2016 6:14 am
நமது இந்தியாவில் மீண்டும் ஒரு காமராஜர் பிறந்தால் மட்டுமே இது போன்ற செலவுகள் தடுக்கப்படும். 07-Sep-2016 7:59 pm
மகாராஜ் - திவ்யா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 2:23 pm

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலிருப்பதைவிட வேலைக்கு செல்வதே சிறந்து. என்பது உண்மையா??
உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பர்களே...

மேலும்

பெண்ணோ ஆணோ அல்லது திருநங்கையரோ, வேலைக்குச் செல்வது அவர்களின் உலகை விரிவாக்கும். ஆனால் அது இயந்திரத்தனமாக மாறிவிடக்கூடாது. வேலை என்பது நமக்கு வருமானம், உடல் நலம், மன நலம், சமூக உறவு, அறிவு இவற்றை வழங்குவதாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இது எவருக்கும் பொருந்தும். 21-Aug-2016 12:41 pm
அன்பு... கோபம் ...பொறாமை .... வேலையின் அர்த்தம் .... சகிப்புத்தன்மை ...... பிறர் பற்றி அற்றிந்து கொள்ளும் தன்மை .இவை எல்லாம் அறிய பெண் வேலைக்கு செல்வது அவசியம் . 20-Aug-2016 3:45 pm
மகிழ்ச்சி 20-Aug-2016 3:40 pm
கண்டிப்பாக வேலை செய்வது நல்லது.. அது வெளியிலோ அல்லது சொந்தமாகவோ.. இது பெண்களின் தன்னம்பிக்கை, தைரியம் , சமூக நிலை தெரிந்து கொள்வர்.. மதியும், மதிப்பும் உயரும்... 18-Aug-2016 11:27 pm
மகாராஜ் - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2016 9:41 am

தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....

மேலும்

மிகவும் சரியான கருத்துக்கள்.....தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள்... 28-Aug-2016 12:11 pm
இருவரும் நான் சொல்லும் கருத்தை மற்றவர் கேட்டே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை . சிறிதும் பொறுமை இன்மை . அவசரம் . எதையும் துணிந்து பேசுவது ,செய்வது . ஒருவரை இன்னொருவர் ஏளனம் செய்து தான் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வது . ஒருவர் மற்றவரை குறைத்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது . இப்படி பல காரணங்கள் உள்ளன தோழி . இதற்கு , ஒரேவழி சகிப்புத் தன்மையும் , பொறுமையும் மட்டுமே . இவை இருந்தால் இன்று விவாகரத்திற்கு இடமே இருந்து இருக்காது. என்பது என் எண்ணம். 15-Aug-2016 4:31 pm
சரியாக கூறினீர்கள் தோழி.......தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் இனிய நன்றிகள்...... 11-Aug-2016 7:10 am
அன்பின் அர்த்தம் மறந்தமையும், உணர்வுகள் மரித்தமையும், திருமணத்தை ஒரு தீர்வாக நினைப்பதுமே ...... 10-Aug-2016 11:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே