மனிதன் கற்கவில்லை

குயிலிடம் நாதத்தை கற்றவன்
காக்கையிடம் ஒற்றுமையை கற்கவில்லை

நரியிடம் ஏமாற்றுவதை கற்றவன்
நாயிடம் நன்றியை கற்கவில்லை

கோழி போல உண்ண கற்றவன்
குருவியிடம் சுறுசுறுப்பை கற்கவில்லை

மாடு போல உழைக்க கற்றவன்
மனிதனாய் வாழ கற்கவில்லை...............!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : Maharaj (21-Jul-17, 7:29 pm)
சேர்த்தது : மகாராஜ்
பார்வை : 423

மேலே