உண்மையறியா உலகில்

விபச்சாரமே கலாச்சாரமென்று திரையிட்டு பொழுதுபோக்காக்கி, பணமே சகலமென்ற மாயை உலகத்தில் உலாவவிடும் உலக நாயகர்களுக்கெல்லாம் இரசிகர்களாகி வாழ்வைத் தொலைக்கும் மனிதர்களே,
உங்களுடன் பிறந்தவனிவன் உரைப்பதைக் கேளீரோ?

சகலத்தையும் தூய்மையாக்கி ஆக்கபூர்வமாக்கி இப்பூலோகமே சொர்க்கமென்று மாற்றிடும் அன்பின் அடியைச் சேர்ந்து நன்மார்க்கம் அறியீரோ??

தவழ்ந்துவரும் காற்று,
தாங்கி நிற்கும் நிலம்,
மழை கொடுக்கும் மேகம்,
பரந்து விரிந்த ஆகாயம்,
எதையும் தனதாக்கி தூய்மையாக்கும் நெருப்பு என்று ஐம்பூதங்களை அறிந்து வணங்காத உங்கள் மூளையில் கரையான் புற்றுக்கட்டியுள்ளதோ??

உண்மையின் வழியில் எளிமையான வடிவில் அளிக்கப்பட வேண்டியவையெல்லாம் தனிவுடையாக்கப்பட்ட கொடுமையில் இன்னும் அணையாமல் எரிகிறது உலகில் போராட்டத் தீ...

உலகத்தையே ஆட்டுவிக்க ஒரு கும்பலே இயங்குகிறது யாவரையும் ஆட்டுவிப்பவன் சூட்சமமாய் எங்கும் நிரம்பி வழிகிறானென்ற சத்தியம் அறியாத குள்ளநரிக் கூட்டமாய்...

தாய் நாடு காக்க உயிரை விடுதலும் மேலேயென்றாலும்,
முழுவுலகம் அதில் சிறுபகுதி நிலம் பல நாடுகளாகப் பிரித்து வைத்ததில் தொடங்கியது இந்த உலகின் அதர்மம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jul-17, 6:49 pm)
பார்வை : 437

மேலே