வாழ்வில் உங்களுக்கு ஊக்கமளிப்பவர் யார்

வாழ்வில் உங்களுக்கு ஊக்கமளிப்பவர் யார்?

எனக்கு ஊக்கமளிப்பவர் கடவுள்.
எந்நிலையிலும் வழிதவறாமல் வழிநடத்திச் செல்கிறார் நான் கண்ட அந்தக் கடவுள்..
அனுபவ ஊற்று அவர்..
அனைத்துயிர்களிலும் வீற்றிருப்பவர் அவர்...
பசி போக்கும் உணவும் அவர்...
நல்ல வழி போதிக்கும் ஞானமும் அவர்...
காலத்தால் மாற்ற இயலாத சத்தியம் அவர்...
நிம்மதியான வாழ்வும் அவரே...
ஆனந்த கீதம் அவரே...
ஆத்மார்த்தமான அன்பு வடிவும் அவரே...
கர்வத்தைக் கருவறுத்து தன்னிலை விளக்க அளிப்பவரும் அவரே...
சகலமும் அவரே...
என்னுள்ளும் அவரே...
உன்னுள்ளும் அவரே...
அவரை அறியா வாழ்வும் வீணே...
ஊக்கமிழந்து உண்மை ஞானத்திலிருந்து விலகிவிடாதே நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jul-17, 5:59 pm)
பார்வை : 747

மேலே